Varisu Movie Review: 'வாரிசு' படம் எப்படி இருக்கு?!
வாங்க பார்க்கலாம்......
தொழில் அதிபரான ராஜேந்திரனுக்கு (சரத்குமார்), ஜெய்(ஸ்ரீகாந்த்), அஜய்(ஷாம்), விஜய் ராஜேந்திரன் (விஜய்) என்று மூன்று மகன்கள். தனக்கு அடுத்து தன் இடத்திற்கு வர எந்த மகனுக்கு தகுதி இருக்கிறது என்பதை பார்க்க ஜெய்யையும், அஜய்யையும் மோதவிட்டுப் பார்க்கிறார் அப்பா.
முதல் இரண்டு மகன்களுக்கும் சேர்மன் நாற்காலி மீது கண். அதனால் அப்பா சொல்லும்படி எல்லாம் நடக்கிறார்கள். தன் அப்பா வீட்டை விட்டு வெளியே போ... என்று விஜய் யை சொல்ல அவரும் சென்று, ஒரு நாள் வருகிறார். வந்து சில நாட்களில் மீண்டும் ஏர்போர்ட் வரை சென்று வீட்டிற்கு வருகிறார். எதற்கு மீண்டும் வந்தார்? வந்ததும் இரண்டாம் பாதியில் விஜய் காட்டிய மாஸ் நடிப்பு தான் 'வாரிசு'. இது ஒரு புறம் இருக்க சரத்குமார் உடலில் ஒரு நோய் ஏற்படுகிறது. அந்த நோய் சரத்குமாரை என்ன செய்தது? விஜய் குடும்பம் இறுதியில் என்ன ஆனது? என்பது தான் கதை களம்.
காமெடி, சென்டிமென்ட், ஹீரோயிசம் என ரசிகர்களை கவர்கிறார் வம்சி. குடும்பம், உறவுகள் தான் கதையின் மையமே. ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற அடைமொழியை உறுதியிட்டு எழுதும் அளவிற்கு சென்டிமென்ட் காட்சிகளை திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார் இயக்குநர் வம்சி. படத்தின் முதல் பாதியில் வரும் ‘அம்மா’ பாடலும், அதற்கான சூழ்நிலையும், விஜய்க்கும் அவரது அம்மாவுக்குமான சென்டிமென்ட்டும் ஈர்க்கிறது. ‘தீ தளபதி’ பாடலின் விஷுவல்ஸ் அதற்கான விஜய்யின் மாஸான நடை நிச்சயம் ரசிகர்களுக்கு காட்சி விருந்து. யோகி பாபு காமெடி ஓகே. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன்கே.எல் படத்தொகுப்பும் மொத்த படத்துக்குமான பலம்.
மொத்தத்தில் இந்த வாரிசை குடும்பத்துடன் ஒரு முறை பொங்கலுக்கு பார்க்கலாம்.....
கருத்துரையிடுக