பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கிராமிய கலை விழா!

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கிராமிய கலை விழா!



தமிழக நாட்டுப்புற கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி கிராமிய கலை விழாவை ஆதரவற்ற இல்லத்தில் உள்ள மாணவ குழந்தைகள், முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே   நாட்டுப்புற கலையை வளர்க்கும் ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தியது. 

இதில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரியும் ஆதரவற்றோர் – முதியோர் இல்லங்களுக்கான நல்லெண்ணத் தூதர் ஏ.ஆர்.ரைஹானா கலந்து கொண்டு இதில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களை ஊக்கப்படுத்திப் பேசினார்.

இந்த கிராமிய மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கெடக்குழி மாரியம்மாள்அந்தோனிதாசன்மகிழினி மணிமாறன்மகாலிங்கம்மதிச்சியம் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் கிளி ஜோசியம்கைரேகை ஜோசியம்ஜவ்வு மிட்டாய்பானை செய்தல்கரகாட்டம்ஒயிலாட்டம்பொய்க்கால் குதிரை ஆட்டம்ராட்டினம் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தன.  இதில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களைச் சேர்ந்த 250–க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சி குறித்து ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில்:


பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் எங்களின் வருடாந்திர நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்மேலும் இந்த ஆண்டு கிராமிய கலைவிழாவை வெற்றிகரமாக நடத்த அவர்கள் எங்கள் அளித்த ஆதரவிற்கு நாங்கள் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டுப்புற கலைகள் தமிழக கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். பாரம்பரியமும் பெருமையும்மிக்க இந்த கலைகள் நமது மாநிலத்தின் சொத்தாகும்.  அந்த நிகழ்ச்சிகளை இதுபோன்ற பெரிய மால்களில் நடத்தும்போதும் அது அனைவரிடமும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அந்த கலைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.






இது குறித்து பேசிய சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மற்றும் பல்லேடியம் மைய இயக்குனர் சபரி நாயர் கூறுகையில்:


ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த ஆண்டு கிராமிய கலைவிழாவை நடத்தியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இங்குள்ள தனித்துவமான சூழல் தமிழக நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாச்சாரத்தை புதுப்பிக்க ஒரு சிறந்த தளமாக உள்ளது. தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதோடுஇதில் ஆதரவற்ற ஏராளமான குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது என்று தெரிவித்தார்.

 

மெல்ல மெல்ல அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கும் விதமாக பொங்கல் பண்டிகைக்கு முந்தைய வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடைபெற்றது. இதில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதை ஏராளமான பார்வையாளர்கள்மாணவர்கள் பார்த்து ரசித்தனர். 




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.