‘பருந்தாகுது ஊர் குருவி’ திரைப்பட விமர்சனம்

‘பருந்தாகுது ஊர் குருவி’ திரைப்பட விமர்சனம்




Casting : Nishant Russo,Vivek Prasanna, Gayathri Iyer, Ratsasan Vinodh, Kodangi Vadivel, Gowtham, Rajesh, Anand, Athik


Directed By : Dhanabalan Govindaraj


Music By : Renjith Unni

Produced By : Lights On Media - Eav Suresh, Sundhara Krishna.P, Venki Chandrsekhar


                                            விமர்சனம்:

அடர்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் நிஷாந்த். சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் நிஷாந்த். அதே நேரத்தில், பல கேள்விகளுடனே சென்னையில் இருந்து அக்கிராமத்தில் பதுங்குவதற்காக அங்கு வருகிறார் விவேக் பிரசன்னா. விவேக் பிரசன்னா மீது கொலை தாக்குதல் நடக்கிறது. தனக்கு உதவுமாறு நிஷாந்திடம் விவேக் பிரசன்னா கேட்க… விவேக் பிரசன்னாவை நிஷாந்த் காப்பாற்றினாரா இல்லையா.? விவேக் பிரசன்னாவை கொலை செய்யத் துடிக்கும் அந்த மர்ம நபர்கள் யார்.? என்பது படத்தின் மீதிக் கதை.....

முதல் படமாக இருந்தாலும் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிக இயல்பாக நடித்திருக்கும் நாயகன் நிஷாந்த் ரூசோ, துறுதுறு நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். தன்னை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்? என்றே தெரியாமல் உயிர் பயத்தோடு பயணிக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் தனது கதபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ஐயர், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் சாகர், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கோடாங்கி வடிவேலு ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். 

விவேக் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சிக்கும் கவுதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகிய நாள்வர் கூட்டணிக்கு  வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், அவர்களுடைய செயல்கள் கவனம் பெறுகிறது. ஒளிப்பதிவாளர் அஷ்வின் நோயல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார். காட்டில் பயணிக்கும் கதையை பரபரப்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை வெவ்வேறு கோணங்களில் காட்டி ரசிக்க வைக்கிறார். 

விவேக் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சிக்கும் கவுதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகிய நாள்வர் கூட்டணிக்கு  வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், அவர்களுடைய செயல்கள் கவனம் பெறுகிறது. உயிருக்கு போராடும் ஒருவரின் உடல்நிலையை காட்டிய விதம் லாஜிக் மீறலாக இருப்பதோடு, விவேக் பிரசன்னாவை கொலை செய்வதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்லாததும் படத்திற்கு சற்று தொய்வை கொடுக்கிறது.


மொத்தத்தில் இந்த ‘பருந்தாகுது ஊர் குருவி’ ஒரே இறக்கையில் பறக்கும்.... 


 


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.