"ரிப்பப்பரி" திரைப்படத்தின் விமர்சனம்!

"ரிப்பப்பரி" திரைப்படத்தின் விமர்சனம்! 




AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், பேய் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் தான் “ரிப்பப்பரி”. 

இந்த படத்தில் மேலும் நடிகர் நோபிள் ஜேம்ஸ், நடிகர் ஶ்ரீனி, நடிகை காவ்யா, நடிகை ஆரத்தி பொடி, மாரி ஆகியோர் நடித்துள்ளனர். 

கோவை தலைக்கரை கிராமத்தில் ஜாதி மாறி கல்யாணம் செய்ய முயற்சிக்கும் ஆண்களை அடுத்தடுத்து கொல்கிறது ஒரு பேய். சில இடங்களில் நாயாக மாறியும் கொள்கிறது. கொன்றவர்களின் தலையில் ஒரு வரி சொல் எழுதபட்டிருக்கிறது. ஊரின் இன்ஸ்பெக்டர் இறந்தவர்களின்  தலையை மொட்டை அடித்து பார்க்கையில் அனைத்துமே ஒரே சொல்.  அந்தப் பேயை பற்றி தெரிந்து கொள்ள  இன்ஸ்பெக்டர், மாஸ்டர் மகேந்திரனையும் அவரது நண்பர்களையும் அங்கு அனுப்புகிறார். இது ஒரு புறம் இருக்க மாஸ்டர் மகேந்திரன் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அதே பெண்ணை மற்றவரும் காதலிக்கிறார்.  இறுதியில் அந்தப் பேயை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டார்களா? அந்தப் பேய் ஏன் இப்படி ஜாதி வெறி பிடித்து அலைகிறது? ஹிரோவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் கதை..... 

கோவை கிராமத்து இளைஞனாக மாஸ்டர் மகேந்திரன் நடிப்பு ஓகே.  ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.  படத்திற்கு இசை ஒகே.  மகேந்திரனின் காதலியை போட்டிக் காதலனாக காதலிக்கும் கதாபாத்திரம் வெளிப்படுத்தும் உடல்மொழி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.  பேய்  படம் என்றால் ஒரு பயம் வரும் ஆனால் பயமா? அப்படினா? என்று சிந்திக்க வைக்கிறது. கதையில் லாஜிக் இல்லை. இயக்குநர் கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். 

மொத்தத்தில் இந்த "ரிப்பப்பரி" பேய் வேஷம்......

Ripupburymoviereviewintamil, Ripupbury

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.