“கழுவேத்தி மூர்க்கன்” அடிதடி ஆட்டம்!

 “கழுவேத்தி மூர்க்கன்” அடிதடி ஆட்டம்! 





ஒலிம்பியா மூவீஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரிப்பில், கௌதம ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  “கழுவேத்தி மூர்க்கன்” இன்று வெளியானது. 

இதில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.  டி.இமான் இசையமைத்துள்ளார். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.... 

சிறுவயது முதலே அருள்நிதியும், சந்தோஷ் பிரதாபும் (பூமி) நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். உயர்ந்த சமூகங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சந்தோஷ் பிரதாப் சமூகத்தை தள்ளி வைத்து வருகின்றனர். ஆனால் அருள்நிதி, நண்பனுக்காக எப்போதும் துணை நிற்கிறார். நண்பனை யாராவது இழிவு படுத்தினாலோ அடித்தாலோ அவர்களை அடித்து துவைக்கிறார். ஒரு கட்டத்தில் தன் சமூக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வந்த சந்தோஷ் பிரதாப் (பூமி)  கொல்லப்படுகிறார். அந்த பழி அருள்நிதி மீது விழுகிறது. இதற்கு பின் என்ன ஆனது? கொலையை அருள்நிதி செய்தாரா? அதற்கு பின் இருக்கும் சூழ்ச்சி மற்றும் அரசியல் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.... 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அடிநாதமாக எடுத்துகொண்டு கழுவேத்தி மூர்க்கன் படத்தை எடுத்துள்ளனர். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு நண்பர்கள். அவர்கள் வாழ்க்கையில் சாதியின் தாக்கமும், அதிகார அரசியலும் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பதை விரிவாக படமாக்கியுள்ளனர். சாதி ஆதிக்கமும், பதவி அரசியலும் என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்லியிருக்காங்க. அதற்கு சில காட்சிகளும், வசனங்களும் உறுதுணையா இருக்கு. நடிகர்களை பொறுத்தவரை, ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை கச்சிதமா நடிச்சி கொடுத்திருக்காங்க. 

குறிப்பா, மூர்க்கசாமி கதாபாத்திரத்தில் அருள்நிதியும், பூமி கதாபாத்திரத்தில சந்தோஷ் பிரதாப்பும் பொருந்தி போறாங்க. அதேபோல் முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா கதாபாத்திரங்கள் ரசிக்க வைக்கின்றன. கோயில் கழுமரம் எனக் கலை இயக்குநர் மகேந்திரா கவனம் பெறுகிறார். டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே கேட்டதுபோலத் தோன்றினாலும் யுகபாரதியின் வரிகளில் ‘அவ கண்ண பாத்தா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. 

மேலும் படத்தில் காதல் காட்சிகள் எதற்கு? காதலி எதற்கு? என்ற கேள்வியும் எழுகிறது. அந்த கதாபாத்திரம் படத்தில் இல்லை என்றாலும் எந்த பாதிப்பும் இருந்திருக்காது. 

மொத்தத்தில் இந்த “கழுவேத்தி மூர்க்கன்” அடிதடி ஆட்டம்......

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.