'துரிதம்' திரை விமர்சனம்

'துரிதம்' திரை விமர்சனம் 



துரிதம் படம் ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ் மற்றும் பால சரவணன் நடிப்பில் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஜூன் 2 ஆம் தேதி  வெளிவந்துள்ள திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை திருவருள் ஜெகநாதன் தயாரித்துள்ளார். நாயகியின் தோழிகளாக வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சென்னையில் வாடகை கார் ஓட்டும் ஜெகன், அவரது காரில் தினமும் அலுவலகம் செல்லும் நாயகி வானதி ஈடனை ஒரு தலையாக காதலிக்கிறார். கதையின் நாயகி வானதி மதுரையிலிருந்து வந்து சென்னையில் தங்கி IT யில் வேலை செய்து கொண்டிருக்கிறார், அங்கு  தன் தோழிகளுடன் தங்குகிறார்.  இவரின் அப்பா மிகவும் கண்டிப்பானவர், வானதி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை 1 மணிக்கு ஒரு தடவை விசாரித்து கொண்டிருப்பார். பிறகு வானதி மீண்டும் மதுரைக்கே போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் நாயகி ரெயிலை தவற விட மதுரைக்கு புறப்படும் ஜெகனை அழைத்து அவரது பைக்கிலேயே பின்னால் உட்கார்ந்து செல்கிறார். நடு வழியில் பைக் பழுதாகி நிற்கிறது. அங்கு லிப்ட் கேட்கும் போது ராம்ஸி காரில் வந்து லிப்ட் கொடுத்து நாயகி ஏறியவுடன் காரை வேகமாக எடுத்து கடத்தி செல்கிறார். நேரம் ஆக ஆக நாயகியின் அப்பா மகளை காண காரை எடுத்து கிளம்புகிறார்.... பிறகு நாயகிக்கு என்ன ஆனது? வானதி காரில் அங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று வானதியின்  அப்பாவிடம் தோழிகள் பொய் சொன்னதால் அவர்கள் சிக்கினார்களா? கதாநாயகனின் காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை...... 

பைபாஸ் சாலை பயண காட்சிகளை படமாக்கியதில் வாசன் மற்றும் அன்புவின் கேமரா உழைத்து இருக்கிறது. நரேஷ் பின்னணி இசை கதையோடு ஒன்ற வைத்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சி மனதை கனக்க செய்யும் ரகம். பால சரவணன் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். சந்தேக தந்தையாக வரும் வெங்கடேஷ் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். என்ன ஆக போகுது என்ற சுவாரஸ்யம் இருக்கு ஆனால் கதை நீளமாக செல்கிறது... நெடுஞ்சாலை பயண காதல் காட்சி ஓகே... ஆனால் இசை தேவையில்லாத இடத்தில் வருவதால் கதையின் வேகத்தை குறைக்கிறது. 

மொத்தத்தில் இந்த  'துரிதம்' ஒரு வழி நெடுஞ்சாலை காதல்....



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.