23 ஜுன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகள்!
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11 லட்சம் கோடியை கடந்திருக்கிறது
நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 41% உயர்ந்திருக்கிறது
செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 16% அதிகரித்திருக்கிறது
முக்கிய சிறப்பம்சங்கள்
(ஜுன்’22 மற்றும் ஜுன்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
- நிகர இலாபம் ஜுன்’22-ல் ₹1213 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹1709 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 41% உயர்ந்திருக்கிறது
- வரிக்கு முந்தைய இலாபம் ஜுன்’22-ல் ₹1345 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹2394 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 78% உயர்ந்திருக்கிறது
- செயல்பாட்டு இலாபம் ஜுன்’22-ல் ₹3564 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹4135 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 16% அதிகரித்திருக்கிறது
- நிகர வட்டி வருவாய் ஜுன்’22-ல் ₹4534 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹5703 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 26% அதிகரித்திருக்கிறது
- கட்டணம் சார்ந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 7% அதிகரித்து ஜுன்’23-ல் ₹671 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
- வருவாய்க்கான செலவு விகிதம் ஜுன்’23-ல் 44.22% என பதிவாகியிருக்கிறது
- உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), ஜுன்’22-ல் 3.10% என்பதிலிருந்து ஜுன்’23-ல் 3.61% ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது.
- சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) ஜுன்’22-ல் 0.73% என்பதிலிருந்து ஜுன்’23-ல் 0.95% ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது.
- பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) ஜுன்’22-ல் 14.18% என்பதிலிருந்து ஜுன்’23-ல் 17.88% ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது
- மொத்த வணிகம் முந்தைய ஆண்டைவிட 9% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது, ஜுன்’22-ல் ₹1009454 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹1100943 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
- மொத்த கடன்கள், ஜுன்’22-ல் ₹425203 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் 13% வளர்ச்சி பெற்று ₹479404 கோடியாக அதிகரித்திருக்கிறது
- RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் ஜுன்’22-ல் ₹244247 கோடி என்ற அளவிலிருந்து ஜுன்’23-ல் ₹276435 கோடியாக உயர்ந்து 13% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
- மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 61% ஆக இருக்கிறது. ரீடெய்ல் கடன்கள் மற்றும் விவசாயக் கடன்கள் முந்தைய ஆண்டைவிட ஒவ்வொன்றும் 16% வளர்ச்சியையும், MSME துறைக்கான கடன்கள் 7% வளர்ச்சியையும் பதிவுசெய்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 14%, ஆட்டோமொபைலுக்கான கடன் 29% மற்றும் தனிநபர் கடன் 52% என அதிகரித்திருக்கின்றன
- வைப்புத் தொகைகள் (டெபாசிட்கள்), முந்தைய ஆண்டைவிட 6% உயர்ந்து ஜுன்’23-ல் ₹621539 கோடி என்ற அளவை எட்டியிருக்கின்றன
- CASA டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட 5% உயர்ந்து ஜுன்’23-ல் ₹250242 கோடி என்ற அளவை எட்டியிருக்கின்றன. மொத்த டெபாசிட்களுள் CASA-ன் பங்களிப்பு 40% ஆக இருக்கிறது.
- GNPA (மொத்த வாராக்கடன்கள்) ஜுன்’22-ல் இருந்த 8.13% லிருந்து ஜுன்’23-ல் 266 bps குறைந்து 5.47% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) ஜுன்’22-ல் இருந்த 2.12% லிருந்து ஜுன்’23-ல் 142 bps குறைந்து 0.70% ஆக பதிவாகியிருக்கிறது
- வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), ஜுன்’22-ல் இருந்த 88.08% லிருந்து ஜுன்’23-ல் 702 bps அதிகரித்து 95.10% ஆக பதிவாகியிருக்கிறது
- மூலதன போதுமான நிலை விகிதம் 15.78% என்பதாகவும் மற்றும் CET-I & அடுக்கு I மூலதனம் முறையே 12.31% & 12.88% என்ற அளவிலும் இருந்தன.
முக்கிய சிறப்பம்சங்கள்
(மார்ச்’23 மற்றும் ஜுன்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
- நிகர இலாபம் மார்ச்’23-ல் ₹1447 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹1709 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 18% உயர்ந்திருக்கிறது
- வரிக்கு முந்தைய இலாபம் மார்ச்’23-ல் ₹1452 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹2394 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 65% உயர்ந்திருக்கிறது
- செயல்பாட்டு இலாபம் மார்ச்’23-ல் ₹4016 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹4135 கோடியாக அதிகரித்திருக்கிறது
- நிகர வட்டி வருவாய் மார்ச்’23-ல் ₹5508 கோடி என்பதிலிருந்து ஜுன்’23-ல் ₹5703 கோடியாக அதிகரித்திருக்கிறது
- சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) ஜுன்’23-ல் 0.95% என 13 bps முன்னேற்றம் கண்டிருக்கிறது
- பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) முந்தைய காலாண்டைவிட ஜுன்’23-ல் 240 bps உயர்ந்து 17.88% ஆக பதிவாகியிருக்கிறது
- வருவாய்க்கான செலவு விகிதம் முந்தைய காலாண்டைவிட ஜுன்’23-ல் 225 bps உயர்ந்து 44.22% என்பதாக மேம்பட்டிருக்கிறது
- முன்னுரிமை துறைக்கான போர்ட்ஃபோலியோ, ஜுன்’23-ல் ₹160863 கோடி என்ற அளவில் இருந்தது. ANBC-ன் ஒரு சதவீதமாக முன்னுரிமை துறைக்கான கடன்கள், ஒழுங்குமுறை தேவைப்பாடான 40% என்பதற்கு எதிராக 44% என்ற உயர்நிலையை எட்டியிருக்கிறது.
வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:
- இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5798 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1970 கிராமப்புறங்களிலும், 1517 சிறு நகரங்களிலும், 1168 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1143 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IFSC பேங்கிங் யூனிட்டும் இருக்கிறது.
- இவ்வங்கி, 4804 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 10805 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.
டிஜிட்டல் வங்கிச்சேவை:
- ஏடிஎம், பிஎன்ஏ & டிஜிட்டல் சேனல்கள் வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் முந்தைய ஆண்டைவிட Q1FY24-ல் 7% அதிகரித்திருக்கின்றன.
- மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 36% உயர்ந்திருக்கிறது.
- UPI பயனாளிகள் மற்றும் பரிவர்த்தனைகள், முந்தைய ஆண்டைவிட முறையே 33% மற்றும் 85% அதிகரித்திருக்கிறது.
- Q1FY24-ன்போது, இவ்வங்கி அதன் டிஜிட்டல் நிலைமாற்ற செயல்திட்டத்தின்கீழ் பல்வேறு டிஜிட்டல் பயன முன்னெடுப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்:
- அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்திற்கான சேர்க்கையில் நேர்த்தியான செயல்பாட்டுக்காக கீழ்வரும் விருதுகளை இவ்வங்கி பெற்றிருக்கிறது:
- உயர்நேர்த்திக்காக APY லீடர்ஷிப் பினாக்கிள் எக்ஸம்பிளரி அவார்டு (வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்களுக்கான திட்டம்): அனைத்து பொதுத்துறை வங்கிகள் மத்தியில், இலக்கின் மீது 181.95% என்பதை எட்டி முதலிடத்தை இந்தியன் வங்கி பெற்றிருக்கிறது.
- ஸ்பான்சர் வங்கிகள் மற்றும் RRBகளுக்கான APY தேசிய சேம்பியன்ஷிப் கோப்பை: அனைத்து குழுக்களிலும் மிகச்சிறந்த வங்கிகளுக்கான தர வரிசையில் இவ்வங்கி 2வது இடத்தைப் பெற்றிருக்கிறது – APY சேம்பியன்ஷிப் எக்ஸம்பிளரி அவார்டு உடன் APY சேம்பியன்ஷிப் பரிசுக் கோப்பையையும் இவ்வங்கி வென்றிருக்கிறது.
எமது சிறப்பு கூர்நோக்கம்:
டிஜிட்டல் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்துவது, பிரத்யேகமாக உருவாக்கப்படும் இனிய அனுபவங்களை வழங்குவது மற்றும் வாடிக்கையாளர்களது பிரச்சனைகளை சுய முனைப்புடன் தீர்ப்பது ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளரது திருப்தியை மேம்படுத்த நாங்கள் பேரார்வத்துடனும், அர்ப்பணிப்போடும் செயலாற்றுகிறோம்.
வங்கியின் பணியாளர்களுக்காக நடத்தப்படும் தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகு முறை வழியாகவும் நம்பிக்கையை மேன்மேலும் மேம்படுத்தவும், நிதிசார் அறிவை ஊக்குவிக்கவும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்;
மேலும் எமது வாடிக்கையாளர்களான தனி நபர்கள் மற்றும் பிசினஸ் நிறுவனங்கள் அவர்களது நிதிசார் இலக்குகளை எட்டுவதற்கு அவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குவது எமது சிறப்பு நோக்கமாக இருக்கிறது
கருத்துரையிடுக