"டை நோ சர்ஸ்" திரை விமர்சனம்
"டை நோ சர்ஸ்" படத்தில் உதய் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். மாறா, அட்டு படத்தில் நடித்த ரிஷி, சாய் பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!
வட சென்னையில் சாலையார் மற்றும் கிளியப்பன் கும்பலுக்கும் இடையே பகை. இதனால் கிளியப்பன் மச்சானை தனது அடியாட்களை வைத்து சாலையார் போட்டுத்தள்ளுகிறார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்பட மச்சானை கொலை செய்த 8 பேரையும் சரணடைய செய்கிறார். இதில் ஒருவனுக்கு தற்போது தான் திருமணம் ஆகியுள்ளது என்பதால் அவனுக்கு பதிலாக அவனது நண்பன் சிறைக்கு செல்கிறான். இதனால் சமாதானம் அடைந்த கிளியப்பன் வீட்டிற்கு பணம் வாங்க சாலையார் கும்பலில் இருந்து ஆட்கள் செல்கிறார்கள் அவர்களுடன் கொலையாளியும் செல்கிறான்.
அங்கு கொலை செய்தது இவன் தான் என கிளியப்பனுக்கு தெரியவருகிறது. பிறகு நாயகன் சந்திக்கும் பின் விளைவுகள் என்ன? இறுதியில் என்ன ஆனது?? என்பதே மீதிக்கதை....
போபோ சசி இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை பரவாயில்லை. கிணற்றுக்குள் இருக்கும் ஹீத் லெட்ஜர் படம், ‘காக்கா நகர்’ ஏரியா என ஜோன்ஸ் வி ஆனந்தின் கேமரா ரகளையாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
வட சென்னை பகுதி காட்சிகள் படத்திற்கு பலம்.... இசையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த "டை நோ சர்ஸ்" அடிக்கும்.....
RATING: 3/5
கருத்துரையிடுக