‘பாபா பிளாக் ஷீப்’ திரை விமர்சனம்!
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பாபா பிளாக் ஷீப்’
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!
சுரேஷ் சக்கரவர்த்தி சேலம் மாவட்டத்தில் தனித்தனியாக ஆண்கள் பள்ளியும், இருபாலர் படிக்கும் பள்ளியும் குறுக்கே சுவர் வைத்து பிரித்து நடத்தி வருகிறார். சுரேஷ் சக்கரவர்த்தி மரணத்திற்குப் பிறகு பள்ளி ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 5 பேரும், இரு பாலர் பயிலும் பள்ளியை சேர்ந்த 5 பேரும் இரு அணிகளாக இருக்கின்றனர். இரு அணியினர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒரு அணிக்கு தலைவர் அயாஸ். மற்றொரு அணிக்கு தலைவர் என்.பி. அவருக்கு துணையாக இருக்கிறார் நிலா(அம்மு அபிராமி).
பள்ளி ஒருங்கிணைந்த பின் ஒரே வகுப்பில் இரண்டு அணியினர்களும் படிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதில் கடைசி பென்ச் யாருக்கு என்பதில் சண்டை, பரீட்சையில் யார் கடைசி மார்க் எடுத்தோம் என்ற ரகளை வகுப்பில் நடக்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய பள்ளி நிர்வாகம் அறிவியல் கண்காட்சி மற்றும் தேர்தல் நடத்துகிறது. தேர்தலில் ஒரு அணி வெற்றி பெற்று கடைசி பெஞ்சை கைப்பற்றுகிறது. அறிவியல் கண்காட்சியில் இரு அணியினர்கள் சண்டைபோட்டு உருண்டு ரகளை செய்ததில் கண்காட்சி பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகிறது. கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நிர்வாகம் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கிறது. அதில் ஒரு அணி தலைவருக்கு டி.சி கொடுத்து வெளியே அனுப்பும் சூழ்நிலை ஏற்படும் போது இரு அணியினர்களும் ஒன்று சேர்கின்றனர்.
பிறகு அம்மு அபிராமி யிடம் பெயர் குறிப்பிடாத டிசம்பர் 12ஆம் தேதி தற்கொலை செய்ய போகும் ஒரு கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தை எழுதியது யார் என்ற குழப்பத்தில் கையெழுத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். அந்த கடிதத்தை எழுதியது யார்? மாணவ படையினர்கள் மூலம் டிசம்பர் 12ஆம் தேதி அந்த தற்கொலை தடுக்கபட்டதா ? என்பதே மீதி கதை......
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையை ராஜ்மோகன் எடுத்துள்ளார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வர கூடாது என்ற விழிப்புணர்வு ஓகே. பள்ளிக்காதல், வகுப்பறை அலப்பறைகள் ரசிக்க வைக்கிறது.
பாடல்கள் பெரிய அளவில் ரசிக்க வைக்கவில்லை.... காமெடி அரைத்த மாவையே அறைத்துள்ளனர்.... கதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த ‘பாபா பிளாக் ஷீப்’ வகுப்பிற்கு ஒரு முறை போகலாம்.......
RATING: 2.5/5
SARAVANAN.S
கருத்துரையிடுக