"பம்பர்" திரைவிமர்சனம்

Bumper Review: "பம்பர்" திரைவிமர்சனம்



பண ஆசை என்னவெல்லாம் மனிதனை செய்யும் என்பதை நேர்மையுடன் மண் வாசனை மாறாமல் "பம்பர்" படம் சொல்லுகிறது. 

நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து திருடுவது, டாஸ்மாக் ‘லாக்’கான நாட்களில் ‘கள்’ளத்தனமாக கல்லா கட்டுவது என்றெல்லாம் குற்றங்களோடு குதூகலமாய் குடும்பம் நடத்துகிற இளைஞன் புலிப்பாண்டி. லோக்கல் போலீஸ் ஏட்டு அவனுக்கு ரொம்பவே சப்போட்டு. பணத்துக்காக அதுவரை செய்யாத பெரிய குற்றத்தை செய்யத் தயாராகிறான். அந்த நேரமாகப் பார்த்து புதிதாக வருகிற போலீஸ் உயரதிகாரி புலிப்பாண்டியையும் அவனுடன் திரியும் கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து சுளுக்கெடுக்க முயற்சிக்கிறார்.


புலிப்பாண்டி, புலிவாகனனுக்கு மாலை போட்டு, தற்காலிக நல்லவனாகி சபரிமலை ஏறுகிறான். அங்கு தென்பட்ட லாட்டரி வியாபாரியிடம் 10 கோடி பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறான். வாங்கியவன் தூக்கக் கலக்கத்தில் அந்த சீட்டை அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விடுகிறான்.மாலை போட்ட புண்ணியமோ என்னவோ அவன் வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசு விழுகிறது. 

சபரிமலையில் விட்டுவந்த லாட்டரி சீட்டு அவனைத் தேடியும் வருகிறது. அந்த கோடிகளை வைத்து மாமன் மகளை தனக்கு ஜோடியாக்கிக் கொள்ளலாம், வறுமையிலிருந்து விடுபட்டு நல்ல வழியில் நடைபோடலாம் என்றெல்லாம் யோசிக்கிறான். ஆனால், நினைப்பதெல்லாம் சுலபமாக நடந்துவிடுமா என்ன? அந்த பணத்தை அவன் அடையமுடியாதபடி பல விதங்களில் சிக்கல் உருவாகிறது. அதையெல்லாம் அவன் எப்படி சமாளிக்கிறான்?

‘கேடி’ஸ்வரன் கோடீஸ்வரன் ஆனானா இல்லையா? என்பதே மீதிக்கதை....


வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற வெற்றிக்கு இந்த கதையும் அப்படியே அமைந்திருக்கிறது.

படத்தின் ஹீரோ வெற்றி என்றாலும் கதையின் ஹீரோ ஹரீஷ் பேரடி தான் என்றே சொல்லலாம்....  தனது சிறந்த நடிப்பை கதை க்கு ஏற்றவாறு வெளிப்படுத்தியுள்ளது படத்திற்கு பலம். ‘பிக்பாஸ்’ ஷிவானி தனக்கு கொடுத்த பணியை செய்திருக்கிறார். தன் பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் ஹீரோவுக்கு அம்மாவாக வருகிற ஆதிரா பாண்டிலெஷ்மி. 

டிக்டாக் ஜி.பி முத்து லட்சங்களில் புரள்பவர், வட்டித் தொழில் செய்பவர் கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக கவிதா பாரதி கம்பீரமாக நடித்திருக்கிறார். 

வினோத் ரத்தினசாமி கேமரா மூலம்  கிராமத்தில் உறைய வைத்துள்ளார். கோவிந்த வசந்தா பாடல் இசை ரசிக்க வைக்கிறது. படத்திற்கு பலமே கதையும் இஸ்லாமிய பெரியவரும் தான்....

ஆனால் இஸ்லாமிய பெரியவரை துரத்திவிட்டு ஹீரோ பெரிய ஆளாக மாறும் காட்சி ஏற்க முடியவில்லையே.... ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் தேவை.... 

மொத்தத்தில் இந்த  "பம்பர்" ரசிகர்கள் மனதை கவர்ந்து அடிக்கும்.....

Rating: 4/5

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.