“எக்கோ” திரைவிமர்சனம்
ஶ்ரீ விஷ்ணு விஷன்ஸ் சார்பாக டாக்டர் ராஜசேகர் தயாரிப்பில், நவீன் கணேஷ் இயக்கத்தில், ஶ்ரீகாந்த் ,வித்யா பிரதீப், பூஜா ஜவெரி, ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “எக்கோ”.
ஐ.டி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஸ்ரீகாந்த் தன்னுடைய முதலாளியின் மகளான பூஜா ஜாவேரியை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால், அம்மாவின் வற்புறுத்தலால் தாய்மாமன் மகளை (வித்யா பிரதீப்) திருமணம் செய்து கொண்டு, தன் அப்பா கட்டிய வீட்டில் குடியேறுகிறார்.
சில நாட்களிலேயே வித்யா பிரதீப் உயிரிழந்து விட, அந்த வழக்கை தற்கொலை என முடித்து வைக்கிறது காவல்துறை. ஆனால், பேய்கள் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஷ் வித்யார்த்தி , வித்யா பிரதீப் உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கிறார்.
இதன் மர்மம் என்ன? என்பதை விறுவிறுப்புடன் கதை சொல்கிறது....
பின்னணி இசை த்ரில்லர் படத்திற்கு ஏற்ற வகையில் நரேன் பாலகுமார் அமைத்திருக்கிறார். குடும்ப பெண்ணாக ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து காட்சிகளுக்கு அழகு சேர்த்திருந்தார் வித்யா பிரதீப். வசனம், திரைக்கதை ஓகே. கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஓகே. கதை பயப்பட வைக்காமலே நகர்ந்து சில இடங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. ப்ளாஷ் பேக் காட்சியின் நீளத்தை சுருக்கி சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த “எக்கோ” மர்ம கலவை.....
RATING: 3/5
கருத்துரையிடுக