கொலை திரைப்படத்தின் விமர்சனம்!

கொலை திரைப்படத்தின் விமர்சனம்!



நடிகர்கள் : 

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த் சங்கர் 

இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் 

ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன் இயக்கம் : பாலாஜி குமார் 

தயாரிப்பு : இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ் 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்! 

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்தியாவின் முன்னனி மாடலிங் நடிகையான லைலா (மீனாட்சி சௌத்ரி) கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். டிஜிபி ஆனந்த் தலைமையில் போலீஸ் பட்டாளமே அந்த ஃப்ளாட்டுக்கு வருகிறது அந்த டீமில் இருக்கும் இளம் போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங்கிடம் இந்த வழக்கை விசாரிக்குமாறு உத்தரவிடுகிறார் டிஜிபி. 

தனியாக இந்த வழக்கை விசாரிக்க திணறும் ரித்திகா சிங், க்ரைம் கேஸ் இன்வெஸ்ட்டிகேஷன் ஸ்பெஷலிஸ்டான விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார். 

இருவரும் சேர்ந்து விசாரிக்க களத்தில் இறங்கும் போது, சங்கிலி பிணைப்புப் போல வரிசையாக சிலர் கனெக்ட் ஆகிறார்கள்.....

பிறகு யார் அந்த கொலையை செய்தது? விசாரணை வளையத்தில் சிக்கியது யாரெல்லாம்? கொலையின் காரணம் என்ன? என்பதே படத்தின்  மீதிக்கதை.... 

துப்பாறிவாளராக  விநாயக் என்ற வேடத்தில் விஜய் ஆண்டனி, வழக்கு விசாரணையை மேற்கொள்லும் விதம் மற்றும் அவருடைய நடிப்பு படத்தை ரசிக்க வைக்கிறது. ரித்திகா சிங் ஸ்டைலிஷான போலீஸாக நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியை போல் அவரும் எந்தவித அலட்டல் இல்லாமல் அமைதியாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மாடல் லைலா என்ற வேடத்தில் நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, மாடல் அழகி கதாபாத்திரத்தில் சரியான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். சிவகுமார் விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. 

படம் முழுவதும் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றாலும், அது தெரியாதவாறு லைட்டிங் செய்து காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சிறப்பு.....

சில காட்சிகள் யூகிக்கக்கூடிய அளவில் இருக்கிறது..... கிராபிக்ஸ் காட்சிகளில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.....

மொத்தத்தில் இந்த "கொலை" விறுவிறுப்பு... 

RATING: 3.5/5

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.