"புரோக்கன் ஸ்கிரிப்ட்" திரைவிமர்சனம்
'ஜோ ஜியாவினி சிங்' கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்து கலக்கியிருக்கும் படம் தான் "புரோக்கன் ஸ்கிரிப்ட்"
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி ஒரு ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். இந்த ஏஜென்சி சிங்கப்பூரில் இருக்கிறது. நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது, அப்படி சென்னை வந்த நாயகி தன் நண்பரை சந்திக்கிறார். அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் நாயகியை பற்றி விசாரிக்கிறார். சில நாட்கள் கழித்து சிங்கப்பூர் செல்லும் அந்த நபர், நாயகியை நேரில் சென்று சந்திக்கிறார். அதே சமயம் உடல் உறுப்பு திருட்டு குறித்து சில விஷயங்களும் நடக்கிறது. நாயகியின் அப்பா வேலை இழந்து கஷ்டப்படும் சமயத்தில். நாயகியும், அவரின் தம்பியும் ஆளுக்கொரு வீட்டில் சென்று திருட முயற்சிக்கின்றனர். அப்படி இவர்கள் போட்ட திட்டத்தின்படி, வீட்டில் திருடிவிட்டு தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை....
படத்திற்கு இசை ஓகே. ஜோ ஜியாவினி சிங் வெள்ளைக்காரர் போல் நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. காமெடியில் ரியோ சிரிக்க வைக்கிறார். சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு ஓகே. கதையை யூகிக்க முடியாதது பாராட்டுக்குரியது. படத்தின் பின்னணி இசை பரவாயில்லை. கதையை இன்னும் சுருக்கமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த "புரோக்கன் ஸ்கிரிப்ட்" ஒரு நீள பாதை......
RATING: 3.2/5
கருத்துரையிடுக