'ஜெயிலர்' திரைவிமர்சனம்
சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஆர். நிர்மல் ஆகியோர் கையாண்டுள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!
ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். தன் பேரனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோக்களை உருவாக்குவது, மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவது, மகன், பேரனின் ஷூவை துடைப்பது என ரிலாக்ஸாக வாழ்கிறார். சிலை திருட்டில் ஈடுபட்ட கும்பலை தேடிச் சென்ற ரஜினியின் மகன் வசந்த் ரவி மாயமாகிறார். வில்லன் விநாயகன் ரஜினியின் குடும்பத்தை கொலை செய்ய அடியாட்களை அனுப்பி தொல்லை கொடுக்கிறார்.
இந்நிலையில் மகன் இறந்த செய்தி வரும் போது ரஜினியை குறை சொல்கிறார் மனைவி ரம்யா கிருஷ்ணன். நேர்மை நேர்மை என்று சொல்லி சொல்லி நீங்கள் வளர்த்தது தான் மகனின் உயிர் போக காரணம் என்கிறார் மனைவி. மகனின் மரணத்திற்கு பழிவாங்க களம் இறங்குகிறார் டைகர் ரஜினி.
உன் குடும்பத்தை விட நான் சொல்லும் வேலை செய்து வா என வில்லன் விநாயகன் கட்டளையிடுகிறார். குடும்பத்திற்காக வில்லன் சொன்ன வேலையை ரஜினி செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை........
ரஜினி வரும் இடங்களில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. தந்தை, மகன் இடையேயான பாசத்தை மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறார் நெல்சன். சாதுவான முத்துவாக இருக்கும் ரஜினி, ’டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாறும் போது அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. அதிலிருந்து தொடங்கும் ரஜினியின் ராஜ்ஜியம் படத்தின் கிளைமாக்ஸ் வரை எங்கும் தொய்வடையவில்லை.
மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, சுனில், கிஷோர் ஆகியோர் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். சிவராஜ்குமார், மோகன்லால் வரும் கிளைமாக்ஸ் காட்சி செம மாஸ். அனிருத்தின் பி.ஜி.எம். படத்திற்கு பெரிய பலம்.
காவாளா பாடலிலும் காமெடி காட்சியிலும் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த "ஜெயிலர்" தீ பொறி......
RATING: 3.8/5
கருத்துரையிடுக