பரம்பொருள் படத்தின் திரைவிமர்சனம்
அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நாளை திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் “பரம்பொருள்”.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
நாகப்பட்டினம் ஒரு கிராமத்தில் வயலில் தென்னை மரம் நடும்போது ஒரு சோழ காலத்து புத்தர் சிலை கிடைக்கிறது. அதை விவசாயி திருட்டுத்தனமாக விற்கும் போது அந்த விவசாயியை கொலை செய்துவிட்டு இந்த சிலையை ஒரு அருங்காட்சியம் நடத்தும் வியாபாரி கடத்தி கொண்டுப்போகிறார். இந்த சிலையின் விவரம் அறிந்த ஹீரோ அமிதேஷ் திருடுகிறார்.
இதையறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் அமிதேஷ்யை மிரட்டி இந்த சிலையை கள்ளத்தனமாக விற்க முயல்கிறார். இதற்கிடையில் தன் தங்கை மிகவும் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் இருக்கிறார் இதற்காக தான் நான் இந்த சிலையை திருடினேன் என்று சொல்ல சரி இந்த சிலையை நாம் இருவரும் பங்கு போட்டுக்கொள்வோம் என்று இருவரும் சேர்ந்து விற்க முயல்கிறார்கள்.
12 கோடி ரூபாய்க்கு அந்த சிலையை வாங்குவதற்கு ஆள் கிடைத்த நேரத்தில், சிலை முற்றிலுமாக சேதமடைந்து விடுகிறது. இதனால், இருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். பிறகு என்ன நடந்தது? சிலை விற்கப்பட்டதா? இல்லையா? என்பதே படத்தின் திரில்லர் நிறைந்த மீதி கதை....
இயக்குனர் சி.அரவிந்தராஜ் ஒரு தெளிவான கதை எடுத்துக்கொண்டு அற்புதமான திரைக்கதை அமைத்து. தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு தரமான படம் கொடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.... பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அசத்தியிருக்கிறார். அமிதேஷ் கதையின் நாயகனாக பொருந்துகிறார். சிறந்த வில்லனாக சரத்குமார் கலக்கியுள்ளார். யுவன் இசை அருமை....
கதையின் முதல் பாதி அங்கும் இங்கும் மெதுவாக நகர்கிறது..... அதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த 'பரம்பொருள்' திரில்லர் பொருள்.....
RATING: 3.8/5
கருத்துரையிடுக