"பீட்சா 3" படம் எப்படி இருக்கு?!
திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் CV குமார் தயாரிப்பில், மோகன் கோவிந்த் இயக்கதில், அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பீட்சா 3 – த மம்மி”.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!
சென்னையில் புதிதாக ஒரு உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் நலன் (அஸ்வின்). அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் மம்மி பொம்மையை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார்.
இதன் பின்னர் அங்கே தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க பேய்களிடம் பேசும் மொபைல் ஆப் தயாரிக்கும் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் அவரின் காதலியாக நடித்துள்ள பவித்ரா மாரிமுத்து.
போலீஸ் அதிகாரியாக வரும் நாயகியின் அண்ணன் (கௌரவ் நாராயணன்) இவர்களது காதலுக்கு எதிரியாக இருக்கிறார். இந்நிலையில் நாயகனைச் சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பிக்கிறது.
உணவகத்தில் இரவு நேரத்தில் பேய் சிகப்பு அல்வா செய்துவிட்டு குளிர்பானத்தில் வைத்து விட்டு செல்கிறது. மறு நாள் காலை இந்த அல்வா இப்படி சுவையாக இருக்கிறதே என்று உணவக பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் பேசுகின்றனர்.
பிறகு நள்ளிரவு உணவகத்திற்கு ஒருவர் போன் செய்து என்ன இருக்கிறது என கேட்க? எதுவும் இல்லை என நாயகன் சொல்ல, இருக்கிறதை எடுத்து வா... ஒரே பசி என்று அந்த நபர் சொல்ல, உடனே சிவப்பு அல்வா ஆர்டர் செய்ய நலன் செல்கிறார்.....
பிறகு என்ன நடந்தது? அந்த பேய் யார்? என்பதே மீது கதை....
குழந்தைகள் மேல் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் குறித்து படம் பிளாஷ் பேக்கில் சொல்லியிருப்பது சிறப்பு. இசை ஓகே... ஒளிப்பதிவு ஓகே... இயக்குனர் கவுரவ் நாராயணன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
பேய் நேரில் வந்து பேசுவது எல்லாம் ஓவர் யப்பா.... பேய் பேசும் ஆப் அதை விட ஓவர்.... கதையை இன்னும் திருத்தமாக சுருக்கமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த "பீட்சா 3" திகில்....
RATING: 3/5
கருத்துரையிடுக