கலைமாமணி அபிராமி ராமநாதன் மற்றும் சென்னை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இருளர் மக்களுக்காக கட்டப்பட்ட 63 தனி வீடுகள்!செங்கல்பட்டு:

அபிராமி ராமநாதன் சென்னை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து இருளர் பழங்குடி மக்களுக்காக "நல்லம்மை ராமநாதன் குயில்குப்பம் நகர்" பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேம்பட்ட வசதி கொண்ட 63 தனி வீடுகளை இளைஞர் நலன் மற்றும்  விளைாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வீடுகளை பயனாளிகளுக்கு  வழங்கிய  விழா  இனிதே நடை பெற்றது. திட்ட மதிப்பீடான 7. 5 கோடியில் 4 கோடியை  திட்டத் தலைவர் திரு அபிராமி ராமநாதன் நன்கொடையாக வழங்கியுள்ளார். அழகாகவும் நேர்த்தியாகவும் மிக வசதியாகவும் கட்டப்பட்ட  இந்த குடியிருப்பு வீடுகள் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் கட்டப்பட்டுள்ளன. இருளர் மக்களுக்காக கட்டப்பட்ட இந்த 63 வீடுகள் ஒவ்வொன்றிலும் இரு படுக்கை அறைகள்,ஒரு சமையலறை,வரவேற்பறை உடனிணைந்த கழிவறை என அனைத்து  வசதிகளும் உள்ளன. வீடுகள்  ஒவ்வொன்றும் 650 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் பகுதியில்  மேம்பட்ட வசதிகளுடன் கூடிய "நல்லம்மை ராமநாதன் நகர்" வீடுகளை இளைஞர் நல மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று,சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழகத்தின் சிறு தொழில் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் மாண்புமிகு த.மு.அன்பரசன் அவர்களின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

கலைமாமணி திரு அபிராமி ராமநாதன் அவர்கள் பேசும்போது இருளர் பழங்குடி மக்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அவர்கள் அபாயகரமான விஷ பாம்புகளைப் பிடித்து வாழ்வை நகர்த்தும் வாழ்வின் சோகநிலையை விளக்கினார். சமூகத்தின் பின் தங்கிய நிலையில் இருக்கும் இருளர் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு நல்ல இருப்பிடம் அமைத்துக் கொடுக்க எண்ணிய அபிராமி ராமநாதன்  மாற்ற இயலாத பட்டாக்களை அரசிடம் பெற்று 2018-2019 ல் இக்குடியிருப்பு வீடுகளை கட்டத் தொடங்கினர்.இதற்கான அடிக்கல்நாட்டி பணி 2018-2019 ல் தொடங்கப்பட்டது.இந்த 63 வீடுகள் கொண்ட குடியிருப்பு 7.5 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொரு வீடும் 650 சதுர அடி கொண்ட 63 குடும்பங்கள் குடியிருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திட்டத்தலைவர் கலைமாமணி திரு.அபிராமி ராமநாதன் தனது பங்களிப்பாக ரூ 4 கோடியை மனமுவந்து வழங்கியுள்ளார். மீதத் தொகையை   அபிராமி ராமநாதன் நண்பர்களும் பல்வேறு  ரோட்டரி சங்கங்களும் ஏற்றுக்கொண்டு இத்திட்டத்தைச் செவ்வனே நிறைவேறியுள்ளது. இதில் அமையப் பெற்றுள்ள ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கை அறைகள், ஒரு வரவேற்பறை, ஒரு சமயலறை ஒரு கழிவறை என வடிவைக்கப் பட்டு பயனாளிகளுக்கு இந்த வீடுடன் கேஸ் ஸ்டவ், குளிசாதன பெட்டி, LED தொலைகாட்சி பெட்டி,LED பல்புகள்,மின் விசிறிகள், மிக்சி, கிரைண்டர், இரும்பு அலமாரி, மெத்தை தலையணை, பாத்திரங்கள், பலசரக்கு சாமான்கள், அமரும் பிளாஸ்டிக் இருக்கைகள், பிரஷர் குக்கர் போன்ற அனைத்து பொருள்களும் வழங்கப்பட்டன. இந்த "நல்லம்மை ராமநாதன் குயில்குப்பம் நகர்" பகுதி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மானாம்பதி கிராமம் பெரியார் நகரில் முள்ளிப்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது.


இவ்வீடுகளில் தரை மற்றும் சுவர்களில் டைல்ஸ் கற்கள் பதிக்கப் பட்டுள்ளன.வீடுகளுக்கு எதிர் காலத்தில் மேல்தளம் கட்டினாலும் தாங்கும் வகையில் பலமான அஸ்திவாரம் போடப் பட்டுள்ளது.திரு அபிராமி ராமநாதன் தனது உரையில் குறிப்பிடும்போது 'நாட்டு மக்கள் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளிவந்தால் தான் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும்' எனக் குறிப்பிட்டார்.அவர் மேலும் தன் உரையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் அனைத்து ரோட்டரி உறுப்பினர்களையும் தனது இத்தகு நற்செயல்களுக்குஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார். இத்திட்டம் ரோட்டரி கிளப்புக்கு மாபெரும் கனவுத் திட்டம் ஆகும்.

VIT பல்கலை கழக நிறுவனரும் வேந்தருருமான திரு G.விஸ்வநாதன் அவர்கள்,திரு அபிராமி ராமநாதன் அவர்களை உயர்கல்வித் திட்டங்களுக்கும் தனது உதவும் கரங்களை நீட்டும் படி கேட்டுக் கொண்டார்.

நல்லம்மை ராமநாதன் நகர் குயில் குப்பம் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற தையல் தொழிற் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. விரைவில் தையல் இயந்திரமும் வழங்கப்படும்  என திருமதி நல்லம்மை ராமநாதன் அவர்கள்  தெரிவித்தார்.இதன் மூலம் அப்பெண்களின் வாழ்வு தன்னிறைவு பெற்று விளங்கும் எனவும் குறிப்பிட்டார். திட்டத் தலைவரும் முன்னாள் ரோட்டரி மாவட்ட கவர்னருமான திரு அபிராமி ராமநாதன் அவர்கள் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகள் கட்டியிருக்கிறார்   அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கி உள்ளார். இது தவிரவும் தமிழகம் முழுவதும் சமூக கூடங்கள் அமைத்தும் இலவச கணிப்பொறி கல்வி கற்பிக்கும் மையங்கள் அமைத்தும் பள்ளி கல்லூரி செல்லாமல் பாதியில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களும் கற்கும் வகையில்  ஆவன செய்திருக்கிறார். திரு அபிராமி ராமநாதன் அவர்கள் வாழ்வில் ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் நிறைய கோவில்கள் கட்டி புணரமைத்து திருப்பணிகளிலும் ஈடு பட்டுள்ளார்.


இந்த விழாவிற்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்இ திருவண்ணாமலை,  மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ரோட்டரி கிளப் உறுப்பினர்களும் பொது மக்களும் சேர்ந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். முன்னாள் சர்வதேச ரோட்டரி சங்க இயக்குநரான A.S.வெங்கடேஷ் அவர்களும்,  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரு ராகுல் நாத் IAS,மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு S S பாலாஜி அவர்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.