"சான்றிதழ்" படத்தின் திரைவிமர்சனம்!

"சான்றிதழ்" படத்தின் திரை விமர்சனம்!வெற்றிவேல் சினிமாஸ் எஸ்.ஜே.எஸ்.சுந்தரம் & ஜேவிஆர் தயாரிப்பில் ஜெயச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா, ரவி மரியா, மனோபாலா, ஆதித்யா கதிர், தனிஷா குப்பண்டா,  காஜல் பசுபதி, உமா ஸ்ரீ மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் தான் "சான்றிதழ்" 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை  என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்க, அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். 

அமைச்சரின் முயற்சிகளும், கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணமும், ஒரு பக்கம் இருக்க, தறுதலை கிராமமாக இருந்த அந்த ஊரை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னாள் வெள்ளைச் சாமி என்பவரது மிகப்பெரிய தியாகத்தையும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க இழந்ததையும், சொல்வது தான் ‘சான்றிதழ்’ படத்தின் கதை..... ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

கேமராமேன் எஸ்.எஸ்.ரவிமாரன் சிவன், பருந்து கோணத்தில் முழு கிராமத்தையும், பாடல் காட்சிகளையும் அழகியலோடு படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் ஓகே. 

தனிமனித மாற்றமே ஊரின் மாற்றம். ஊர்களின் மாற்றமே நாட்டின் மாற்றம் என்பதைச் சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.... ஆனால் கதையை இன்னும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். 

மொத்தத்தில் இந்த "சான்றிதழ்" ஒரு முறை செல்லும்....

 RATING: 2.5/5
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.