"ரங்கோலி" திரைவிமர்சனம்

"ரங்கோலி" திரைவிமர்சனம் கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்து அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "ரங்கோலி" 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்! 

ஆடை உலர் வெளுப்பக தொழிலை செய்து வரும் காந்தி, காளியம்மா தம்பதிகளுக்கு சத்யா எனும் மகனும், வேம்பு லட்சுமி  எனும் மகளும் உள்ளனர். இந்த குடும்பம் கடனாளியாக வாழ்ந்து வருகிறது. மகன்  சத்யா அங்குள்ள அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பள்ளியில் 'ஏ லெவல்' கல்வி கற்று வருகிறார். ஒரு முறை நண்பர்களுடன் ஏற்பட்ட சிறிய தகராறால் இவர்களை காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். காவல் நிலையத்திற்கு குடும்பத்துடன் வரவழைத்து விட்டானே..! என சத்யா மீது அவரது பெற்றோர்கள் கடும் கோபம் அடைகிறார்கள். 

அத்துடன் உன் உடன் படிக்கும் சக மாணவர்களின் சகவாசம் சரியாக இல்லை என அவர்களே தன்னிச்சையாக முடிவெடுத்து  சத்யாவை அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளியில்  சேர்க்கிறார்கள். புதிய பள்ளியில் சேர்ந்தவுடன் அங்குள்ள மாணவர்களுடன் பார்வதி என்ற மாணவிக்காக தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது. பள்ளி கழிவறையில் I LOVE YOU PARVATHI BY SATHYA என்ற வரியை மாணவி பார்வதி மற்றும் ஆசிரியர்கள் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. கடும் மோதல் ஏற்பட்டவுடன் சத்யாவை பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்ப முடிவு செய்கிறது. பிறகு யார் அதை எழுதியது? மாணவன் சத்யா மனநிலை என்ன ஆனது? குடும்ப வறுமைக்காக அவன் எடுத்த இறுதி முடிவு என்ன?  என்பதே படத்தின் மீதி கதை.... 

சத்யாவாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் ஹமரேஷ் தனது நடிப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். பார்வதியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பிரார்த்தனா சந்தீப் பார்வையிலேயே கவர்ந்திருக்கிறார்.  சத்யாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ்- அவரது மனைவியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை சாய் ஸ்ரீ பிரபாகரன் தன் குடும்பமாகவே மாறி தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். படம் பார்க்கும் போது பள்ளியில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. இசையமைத்துள்ளார் சுந்தரமூர்த்தியின் இசை அருமை... மருதநாயகம் ஓளிப்பதிவு சிறப்பு... இயக்குனர் வாலி மோகன்தாஸ் சிறந்த பள்ளி கதையை தேர்வு செய்துள்ளார். 

பள்ளி காதல் காட்சியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 மொத்தத்தில் இந்த  "ரங்கோலி" பள்ளி நினைவை தூண்டும்.....

RATING: 3/5

 

rangoli movie rangoli movie review in tamil

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.