திருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்!

திருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்!



திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்  லட்சகணக்கான மக்கள் கலந்துகொள்ள, 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு கோலாகலமாக  நடைபெற்றது. இவ்விழாவினில்  இந்து முன்னணி மாநில செயலாளர் M.சேவுகன் அவர்கள் தலைமையேற்று, கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் S.G.சூர்யா அவர்கள் மற்றும் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் J.S.கிஷோர்ஜி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே  துவங்கி நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், திரூப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து லட்சக்கணக்கிலான மக்கள் வெகு உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் பல வண்ணங்களில், பல வித தோற்றங்களில், பல அளவுகளில்  அலங்கரிக்கப்பட்ட,  2000க்கும் மேற்பட்ட, விநாயகர் சிலைகள் கலந்து கொண்டன. கண்காட்சி போல,  பெரும் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பக்தியுடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

இவ்விழாவினில் S. செந்தில்குமார் ஜி,  மாநிலச் செயலாளர் திருப்பூர் மாவட்டம்,  கோட்டைச்செயலாளர் மோகன்ஜி,  திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் சாமுண்டி ஜி,  திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.