"ஜெய் விஜயம்" திரைவிமர்சனம்

"ஜெய் விஜயம்" திரைவிமர்சனம்




ஜெய்சதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில், ஜெய் ஆகாஷ், அக்ஷயா கந்தமுதன், ஏசிபி ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், அட்சயா ரே ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் "ஜெய் விஜயம்". 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

Hallucination (மாய காட்சி) நோயால் நினைவாற்றலை இழந்த ஜெய் ஆகாஷ் (ஜெய்) போலீஸ் ஸ்டேஷன் சென்று தன் அப்பா, மனைவி, தங்கை என்று சொல்லும் மூவரும் தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் என் உண்மையான சொந்தங்கள் இல்லை. தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று குழம்பி போய் சொல்ல கதை அங்கிருந்து ஃபிளாஷ் பேக் -ல் ஆரம்பம் ஆகிறது. ஜெய், அவரது மனைவி (அக்ஷயா கந்தமுதன்) அப்பா, தங்கை ஆகிய நால்வரும் ஒரு புது வீட்டிற்கு குடியேருகிறார்கள்.இரவு தூங்கும் நேரத்தில் மாடியில் ஏதோ சப்தம் கேட்க சென்று பார்க்கையில், அங்கு யாரும் இல்லை… மாய தோற்றம் தான் என்று மனைவி சொல்ல….. இப்படி தினமும் தொடரும் தருவாயில் நாயகனான ஜெய்க்கு சந்தேகம் எழுகிறது.

தொடர்ச்சியாக மனைவியும் தங்கையும் சேர்ந்து, தன்னை ஏமாற்றுகிறார்கள் என்றும் அப்பா என்று சொல்லும் அப்பாவும் உண்மையில்லை என்று தெரிந்து அதிர்ந்த ஜெய்க்கு, நீ ஒரு கொலைகாரன் என்று சொல்ல, உண்மையில் ஜெய் யார்? அவர் யாரை கொலை செய்தார்? அப்பா மனைவி தங்கை என்று நடிக்கும் மூவரும் யார்? இறுதியாக Hallucination நோயில் இருந்து வெளி வந்தாரா என்பதே "ஜெய் விஜயம்"… 

ஜெய் யாக வரும் ஜெய் ஆகாஷ் காதல் காட்சி எதார்த்தம்..... நாயகி அக்ஷயா தனது வேலையை சரியாக செய்து இருக்கிறார். கதையின் புலனாய்வு காட்சிகள் ஆர்வத்தை தூண்டுகிறது... அனைவரது நடிப்பும் எதார்த்தம். இரண்டாம் பாதியில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டாலும், அவை யூகிக்க முடியாதபடி இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். 

மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்..... 

மொத்தத்தில் இந்த  "ஜெய் விஜயம்" ஆர்வம்....

Rating: 2.8/5

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.