'கார்டியன்' திரைப்பட விமர்சனம்!
வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாத நபராக வளர்கிறார் நாயகி ஹன்சிகா மோத்வானி. இவர் தொட்ட காரியம் எதுவும் துலங்கவும் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஹன்சிகா வேலை தேடி சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு ஒரு ரத்த காவு வாங்கும் படியான ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது.
அந்த விபத்தின் மூலம் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இதுவரை அதிர்ஷ்டமே இல்லாமல் வளர்ந்து வந்த ஹன்சிகா, இனி அவர் நினைக்கும் அனைத்து விஷயங்களும் அப்படியே நடக்கும் படியாக சக்தி அவருக்கு கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு அவர் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கிறார். அவருக்கு நினைத்த வேலையும் கிடைத்து விடுகிறது.
வாழ்க்கையும் சந்தோஷமாக செல்லும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஹன்சிகாவுக்கு பாதகமான சில விஷயங்களில் அந்த சக்தியால் நடக்கிறது. அதன் பின் அவருக்கு பேய் பிடித்து விடுகிறது.
பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை....
படம் ஹன்சிகாவைச் சுற்றியே நகர்கிறது. முடிந்த வரை நன்றாகவே நடித்திருக்கிறார். படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடி வேண்டும் என்பதற்காக பிரதீப் ராயனை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் அவ்வப்போது வந்து செல்கிறார். ஃபிளாஷ்பேக்கில் குழந்தையின் தாயாக வருபவரும் குழந்தையும் கவனம் ஈர்க்கிறார்கள்.
வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதியில் கதை நகர்ந்த விதமும், கேமரா நகர்ந்த விதமும் ரொம்பவே நல்லா இருந்தது. இரண்டாவது பாதி பல படங்களில் பார்த்த ரிபீட் மோடில் இருக்கு.
இசையிலும், கதையிலும் மேலும் கவனம் தேவை.....
மொத்தத்தில் இந்த "கார்டியன்" பழைய பேய் கதை......
RATING : 2.8/5
கருத்துரையிடுக