"பிரேமலு" விமர்சனம்

"பிரேமலு" விமர்சனம் 
நடிகர் & நடிகைகள் :- நஸ்லென் கே. கஃபூர், மமீதா பைஜு, அல்தாப் சலீம், ஷியாம் மோகன் எம், அகில பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கிரிஷ் ஏ டி.

ஒளிப்பதிவாளர் :- அஜ்மல் சாபு.

படத்தொகுப்பாளர் :- ஆகாஷ் ஜோசப்.

இசையமைப்பாளர் :- விஷ்ணு விஜய்.

தயாரிப்பு நிறுவனம் :- பாவனா ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன்.


மலையாளத்தில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் பிரேமலு. அதே பெயரில் தமிழில் டப்பாகி இருக்கிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

இன்ஜினியரிங் படிக்கும்போதே ஹீரோ நஸ்லெனுக்கு காதல் தோல்வி. ஊருக்கு வந்து அப்பாவுக்கு பேக்கரியில் உதவியாக இருக்கிறார். யு.கே  போக வேண்டும் என்ற அவரின் கனவு தவிடுபொடியாக, நண்பன் அட்வைஸ்படி ஐதராபாத் வருகிறார். அங்கே கோச்சிங் சென்டரில் படிக்கிறார், பின்னர் வெயிட்டராக வேலை செய்கிறார். 

ஐதராபாத்தில் ஐடியில் வேலை செய்யும் மமிதாவை திருமண வீட்டில் பார்த்தவுடனே நஸ்லெனுக்கு பிடித்து போகிறது. காதல் வயப்படுகிறார், ஒருதலையாக காதலிக்கிறார். அதே சமயம், ஐ.டி கம்பெனியில் மமிதாவுடன் வேலை செய்யும் ஷியாம் மோகனும் மமிதாவை ஒரு தலையாக காதலிக்கிறார். இதில் யார் காதல் வெற்றி அடைந்தது? பிறகு நடந்த பிரச்சனைகள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை..... 

விஷ்ணு விஜய்யின் இசையில், கே.ஜி.மார்கோஸ் குரலில் 'தெலுங்கானா பொம்மலு' பாடல் படத்தின் 'வைப்' மெட்டீரியல். ஏனைய பாடல்கள் படத்தோடு வந்துப் போகின்றன. தன் பின்னணி இசையால், கொண்டாட்டம், குதூகலத்தோடு, உணர்வுகளையும் கடத்தியிருக்கிறார் விஷ்ணு விஜய். சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களின் பங்கு, தமிழ் வசனங்களையும் பாடல்களையும் பயன்படுத்திய விதம் ஆகியவை ரசிக்க வைக்கின்றன. காதல் கலந்த சீன்கள், நடிகர்களின் பங்களிப்பு, திரைக்கதை விறுவிறுப்பு, இயல்பான காட்சிகள் என பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகிறது. 

கிளைமேக்ஸ் காதல் காட்சி யூகிக்க கூடிய அளவில் இருந்தது. காமெடியில் கூடுதல் கவனம் தேவை...... 

மொத்தத்தில் இந்த "பிரேமலு" ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்....... 

RATING: 3/5

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.