ஆலகாலம் திரைவிமர்சனம்
தயாரிப்பு : ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : ஜெய கிருஷ்ணா, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : ஜெய கிருஷ்ணா
ஜெய கிருஷ்ணா இந்தப் படத்தை முதல்முறையாக இயக்க மட்டும் செய்யவில்லை தயாரிப்பாளரும் படத்தின் நாயகனும் அவரே தான்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
ஊரில் சாராயம் அருந்தி தந்தை இறந்ததால் தாய் யசோதை ( ஈஸ்வரி ராவ்) தனது மகன் ஜெய் ( ஜெயகிருஷ்ணா) யை பொத்தி பொத்தி சாராயம் பக்கம் சாயாமல் வளர்க்கிறார். மகனும் தாயின் சொல்படி கேட்டு நடக்கிறார். தனது தாய் யசோதை, நகரத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி ஒன்றில் உயர்கல்விக்காக ஜெய்யை சேர்க்கிறார்.
அத்துடன் அங்குள்ள மாணவர் விடுதியிலும் சேர்க்கிறார். ஜெய கிருஷ்ணாவும் ஒழுக்கம், கல்வி இவற்றில் சிறந்து விளங்கி நல்ல மாணவனாகத் திகழும் வேளையில் அந்த நற்குணங்களே உடன்படிக்கும் மாணவி சாந்தினிக்கு அவர் மீது காதலை ஏற்படுத்த, சக மாணவர்களுக்கு அந்த காதல் பொறாமையை ஏற்படுத்த… அதன் விளைவு அவரை எங்கெங்கோ கொண்டு சென்று கடைசியில் குடிகாரனாகவும் மாற்றி விடுகிறது.
பிறகு படிப்படியாக அதற்கு அடிமையாகிறான். அதன் பிறகு மது பழக்கத்திலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை....
மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஏற்படுவது உறுதி. பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குநரின் எண்ணத்திற்கு தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள்.
காமெடியில் மட்டும் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த 'ஆலகாலம்' மது பிரியர்களுக்கு துடிக்கும்... ஆட்சியாளர்களுக்கு வலிக்கும்.....
RATING: 3/5
கருத்துரையிடுக