அக்கரன்- திரைவிமர்சனம்

அக்கரன்- திரைவிமர்சனம் 
நடிகர்கள் : எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஷ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம்குமார், பிரியதர்ஷினி, கார்த்திக் சந்திரசேகர்
இசை : எஸ்.ஆர்.ஹரி
ஒளிப்பதிவு : எம்.ஏ.ஆனந்த்
இயக்கம் : அருண் கே. பிரசாத்
தயாரிப்பு : குண்ட்ரம் புரொடக்‌ஷன்ஸ் – கே.கே.டி


சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

மதுரையில் வசித்து வருபவர் வீரபாண்டி(எம்.எஸ். பாஸ்கர்). அவரின் மகள்கள் தேவி (வெண்பா), ப்ரியா( ப்ரியதர்ஷினி). நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார் ப்ரியா. இந்நிலையில் பயிற்சி மையத்தில் நடந்த ஒரு சிறு சம்பவத்திற்கு பிறகு ப்ரியா மாயமாகிவிடுகிறார். அந்த பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் முன்னாள் எம்.பி.யின் மைத்துனர். 

பெரிய தொகை கொடுத்தால் கல்லூரியில் நிச்சயம் சீட் வாங்கிக் கொடுப்போம் என்கிறார் அவர். அப்படி காசு கொடுத்து சீட் வாங்க மறுக்கிறார் ப்ரியா. இதையடுத்து ப்ரியா கொலை செய்யப்படுகிறார். மகளின் கொலைக்கு பழிவாங்க கிளம்பிவிடுகிறார் வீரபாண்டி. இருவரை கடத்தி சென்று அடைத்து வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அவர்களிடம் சில கேள்விகளை கேட்கிறார். அதற்கு இருவரும் வெவ்வேறு மாதிரியாக பதில் சொல்கிறார்கள். 

அவர்களுடைய பதில்களில் உண்மை இல்லாததால் அவர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க எம்.எஸ்.பாஸ்கர் தயாராக, ஒரு கட்டத்தில் இருவரும் உண்மையை சொல்கிறார்கள். என்ன சொன்னார்கள்? அவர் கடத்தி வைத்திருக்கும் இரண்டு நபர்கள் யார்? என்பதே கதை.... 

படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். கவுன்சிலர் செல்வமாக வரும் கார்த்திக் சந்திரசேகரின் நடிப்பு பாராட்டுக்குரியது. வில்லன்களாக நடித்திருக்கும் ஆகாஷ் பிரேம் குமார் மற்றும் கார்த்திக் சந்திரசேகர் இருவருக்கும் பெரிய சினிமா அனுபவம் இல்லை என்றாலும், பலமான கதாபாத்திரத்தை மிக பக்குவமாக கையாண்டு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் எஸ.ஆர்.ஹரி இருவரும் ஆக்‌ஷன் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பணியாற்றியிருக்கிறார்கள். கிளைமேக்ஸ் திருப்புமுனை காட்சிக்கு இயக்குநர் அருண் கே.பிரசாத் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் இந்த 'அக்கரன்' சமூக அக்கறை உள்ளவன்.....

RATING: 3/5


 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.