அரண்மனை 4 திரைவிமர்சனம்
தயாரிப்பு - பென்ஸ் மீடியா, அவ்னி சினிமேக்ஸ்
இயக்கம் - சுந்தர் சி
இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
சென்னையில் வக்கீலாக இருக்கும் சுந்தர் சி அவரின் தங்கை தமன்னா இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த தமன்னாக்கு என்ன நேர்ந்திருக்கும் என அறிந்து கொள்ள உறவினர் கோவை சரளாவுடன் கிராமத்துக்கு வருகிறார் சுந்தர் சி.
அரண்மனையின் சொந்தக்காரர் டெல்லி கணேஷ். அந்த பங்களாவில் செட் பிராப்பர்ட்டியாக விடிவி கணேஷும், யோகி பாபுவும் இருக்கிறார்கள். அவரின் பேத்தி ராஷி கண்ணா. அந்த அரண்மனையின் இன்னொரு செட் பிராப்பர்ட்டி சேசு. கேமியோ செட் பிராப்பர்ட்டியாக மொட்டை ராஜேந்திரன் உள்ளார்கள்.
தங்கை தமன்னா, மாப்பிள்ளை சந்தோஷ பிரதாப் மரணத்தில் உள்ள மர்மங்கள் என்ன என்பதே படத்தின் கதை....
ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசையும், இரண்டு பாடல்களும் செம்ம ரகம். படத்தின் நகைச்சுவைக்கு யோகிபாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, சேஷு கூட்டணி சரியாக இருந்தது. தமன்னாவின் அம்மா நடிப்பு அருமை. திகில் காட்சிகள் எல்லாம் சிறப்பு. கிளைமேக்ஸ் சிம்ரன், குஷ்பு பாடல் குத்தாட்டம் போட வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
காமெடியில் மட்டும் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த அரண்மனை 4 திகில் கலந்த பரபரப்பான மனை....
RATING: 3/5
கருத்துரையிடுக