சென்னையில் 80 வயது மூதாட்டிக்கு ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை!
சென்னை:
கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை, ரோபோடிக் உதவியுடன் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சையை துவங்கிய ஓராண்டில் 4 பேருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும், 4 ரோபோடிக் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை செய்யப்பட்டுள்ளன, தற்போது அவர்கள் 4 பேரும் நலமுடன் உள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரும் ஆறு மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். முதல் நோயாளி, சென்னையைச் சேர்ந்த 80 வயதுப் பெண்மணிக்கு, வயிற்றில் புற்று நோய் பரவலுடன் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கீமோதெரபியின் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு அவர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். இந்த நிலையில் அவருக்கு மிகவும் சிக்கலான சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வெப்பமான கீமோதெரபியை வயிற்றுத் துவாரத்தில் ரோபோ உதவியுடன் உட்செலுத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது, இது அதிக துல்லியமான சிகிச்சை என்பதோடு நோயாளி வேகமாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
இது குறித்து கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை, புற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராஜசுந்தரம் கூறுகையில்:
அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பிறகு, சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை அறுவை சிகிச்சை குறித்து மயக்க மருந்து நிபுணர்கள், புற்றுநோயியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு குழுக்கள் உட்பட பல்வேறு மருத்துவ நிபுணர்களிடையே விரிவான ஆலோசனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த 2வது நாள் நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார் மற்றும் 6வது நாள் இங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ள வேண்டிய மீதி கீமோதெரபி சிகிச்சையானது எந்தவித சிக்கலும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:
இந்த சிகிச்சை முடிந்த பின் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட சில மாதங்கள் ஆகும். ஏனெனில் அவர்களின் உறுப்புகள் சோர்வடைந்து காணப்படும். இந்த நிலையில் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவர்களுக்கு வழங்கும்போது மிக வேகமாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அனுராக் யாதவ் கூறுகையில்:
இந்தியாவில் 80 வயது பெண்ணுக்கு முதல் ரோபோடிக் உதவியுடன் சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை அளித்த சென்னையில் உள்ள முதல் மருத்துவமனை எங்கள் மருத்துவமனையாகும். இந்த அற்புதமான சிகிச்சையின் மூலம் எங்கள் மருத்துவமனை மேலும் 4 ரோபோடிக் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. எங்கள் நோயாளிகள் வழக்கமான அறுவை சிகிச்சையை விட இந்த சிகிச்சையை விரும்புகின்றனர். இதற்கு காரணம் நோயாளி அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் கூறுகையில்:
ரோபோடிக் அறுவை சிகிச்சையானது குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு செயல்முறைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, முன்பு செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளும் இப்போது சாத்தியமாகின்றன. இதில் அதிக துல்லியம், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள், நோயாளிக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் குறைந்த அளவிலான சிக்கல்கள் மட்டுமே உள்ளன. சிக்கலான புற்றுநோயியல் செயல்முறைகள் கூட ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தி பாதுகாப்பாகச் செய்யலாம் என்பதை எங்களுக்கு இந்த அனுபவம் நிரூபிக்கிறது, இதன் விளைவாக தீவிர வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.இந்த நோயாளிகள் வழக்கமான மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் மற்றும் கடந்த ஆறு மாதங்களில் அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கருத்துரையிடுக