HIT LIST- திரை விமர்சனம்
இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கி உள்ளனர். விஜய் கனிஷ்காவுடன் இணைந்து சரத்குமார், கெளதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நினைத்து அசைவம் கூட சாப்பிடாமல் ஐடி கம்பெனியில் வேலை செய்து வாழ்ந்து வரும் ஹீரோ விஜய் கனிஷ்கா குடும்பத்தில் அவரது அம்மாவையும் சகோதரியையும் ஒரு மாஸ்க் மேன் கடத்திக் செல்கிறான்.
கடத்தப்பட்ட இருவரையும் வைத்து ஹீரோவை பிளாக்மெயில் செய்து இரண்டு கொலைகளை செய்ய வைக்கிறான். அந்த கொலைகளை விசாரிக்க சரத்குமார் போலீஸ் அதிகாரியாக களம் இறங்குகிறார். அந்த மாஸ்க் மேன் யார்? சரத்குமார் புலனாய்வில் சிக்கினானா? அம்மா, தங்கையை காப்பாற்றினாரா? ஹீரோ என்பதே கதை....
புதிய ஹீரோ போல தெரியாமல் தனது முழு நடிப்பின் திறமையையும் வெளிபடுத்தியுள்ளார் விஜய் கனிஷ்கா. சண்டைக்காட்சி படத்திற்கு பலம். சமுத்திரக்கனி குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய படங்களில் சொல்லும் சமூக கருத்துக்களைப் போல, அதற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
கெளதம் மேனன், அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். நீட், கொரோனா கால நிகழ்வை பற்றி கதை அமைந்திருக்கிறது. படத்தின் உச்சகட்ட ட்விஸ்டே முகமுடி அணிந்து வரும் மாஸ்க் மேன் யார்? என்பது தான்.
இசையிலும், மாஸ்க் மேன் உடல் அசைவு மற்றும் குரலிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.....
மொத்தத்தில் இந்த 'ஹிட் லிஸ்ட்' அதிரடி டிவிஸ்ட்.....
RATING: 3/5
கருத்துரையிடுக