இங்க நான் தான் கிங்கு- விமர்சனம்

இங்க நான் தான் கிங்கு- விமர்சனம் 



தயாரிப்பு - கோபுரம் பிலிம்ஸ்

இயக்கம் - ஆனந்த் நாராயணன்

இசை - டி இமான்

நடிப்பு - சந்தானம், பிரியலயா, தம்பி ராமையா

வெளியான தேதி - 17 மே 2024

நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்


சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 


வெற்றிவேல் (சந்தானம்) திருமணமாகாத முதிர்கண்ணன். சொந்த வீடில்லாத காரணம் திருமணத்திற்கு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்த வீடும் வாங்கி ரெடியாக இருக்கிறார். கல்யாண ஆசை முற்றிப் போய் மேர்ட்ரிமோனியல் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்ந்து தனக்குப் பெண் தேடுகிறார். 

அவருக்கு தேவை எல்லாம் வீட்டுக்கு வாங்கிய கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையுடன் ஒரு பெண். எனவே தரகர் ஒரு ஜமீன் குடும்பத்தில் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். அங்கு கிடைக்கும் ராஜ வரவேற்பு, ஜமீன் பங்களா அனைத்தையும் பார்த்து மயங்கும் சந்தானத்தை, மயக்கம் தெளிவதற்குள் தன் மகள் தேன்மொழிக்கு (ப்ரியாலயா) கல்யாணம் செய்து வைக்கிறார் பெரிய ஜமீன் விஜயகுமார் (தம்பி ராமையா). 


திருமணத்திற்கு பின்பு, ஜமீனுக்கு பத்து கோடி கடன் இருப்பதும், ஊர்க்காரர்கள் சார்ந்து மகளுக்கு மணமுடித்து வைத்தால் சொத்து எல்லாவற்றையும் கடன்காரர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஜமீன் செய்த மாஸ்டர் ப்ளானும் வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன் பின் மனைவியுடன் சேர்த்து மாமனாரையும், மச்சானான சின்ன ஜமீனையும் (பால சரவணன்) பார்த்துக் கொள்ளும் பாரமும் சேர்ந்து கொள்கிறது. 

அவர்களை சென்னைக்கு அழைத்து வருகிறார். இதே வேளையில் சென்னையில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்க தீவிரவாத கும்பலும் சென்னை வருகிறது. கடனை எப்படி கட்டுவது என முழி பிதுங்கும் சந்தானத்திற்கு 50 லட்சம் கிடைக்க ஒரு வாய்ப்பு அமைகிறது.  பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை.... 

கொஞ்சம் காதல், நிறைய காமெடி என காமெடியில் கிங்குதான் என நிரூபித்திருக்கிறார் சந்தானம். பால சரவணனின் வண்டியில் வழி சொல்லும் ஒரு காமெடி பிரமாதம். அறிமுக நடிகையான ப்ரியாலயா தனது வேலையை செய்திருக்கிறார். விவேக் பிரசன்னாவிற்கு நல்லதொரு கதாபாத்திரம்.   இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.

தீவிரவாதி வெடிகுண்டு காட்சி மற்றும் கிளைமேக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்..... 

மொத்தத்தில் 'இங்க நான் தான் கிங்கு' சிரிப்பு அலை.....

RATING: 3.8/5



inga naa than kingu vimarsanam inga naa thaan kingu movie

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.