12 வயது சிறுவனின் முதல் இசை நிகழ்ச்சி!
சென்னை:
மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் 12 வயதான அபினவ் விஸ்வநாதனின் முதல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் கே.கே நகரில் உள்ள PSBB மேல் நிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இசை மேல் உள்ள ஆர்வத்தால் இசைக் கலைஞர் திரு UP ராஜு மற்றும் U நாகமணி அவர்களிடம் இசை பயின்று தற்போது முதல் அரங்கேற்றத்தை கோவிலில் தொடங்கியுள்ளார். சிறுவன் அபினவ் விஸ்வநாதனுடன் முன்னணி தவில் வித்துவான் திரு.கே. சேகர் அவர்கள் பக்க வாத்தியம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சிறுவனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு ஊக்குவித்தனர் .
சிறுவனின் பெற்றோர்கள் திரு. விஸ்வநாதன் மற்றும் திருமதி. காயத்ரி விஸ்வநாதன் கூறுகையில்:
முதலில் கடவுளுக்கு நன்றி. எங்களது மகன் அபினவ் இசையில் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முறையான பயிற்சி பெற திரு UP ராஜு மற்றும் U நாகமணி அவர்களிடம் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பினோம். அவர்கள் நன்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இது எங்கள் மகனின் முதல் இசை நிகழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஊக்குவித்து பாராட்டி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என இருவரும் கூறினர்.
கருத்துரையிடுக