ஸ்ருதிலய வித்யாலயாவின் 35 வது ஆண்டு விழா!
சென்னை:
சென்னை ஸ்ருதிலய வித்யாலா இசை நாட்டியப் பள்ளியின் 35 ஆவது ஆண்டு விழாவும் , கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் எழுதிய சின்னச் சின்ன நீதிக்கதைகள் நூல் வெளியீட்டு விழாவும் கவிதை உறவு அமைப்பின் நிறுவனர் கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
முனைவர் உமாபாரதி முனைவர் கீதா ஸ்ரீ நிர்மலா உதயம் ராம் ராஜேஸ்வரி அமுதா பாலகிருஷ்ணன் மனோன்மணி வரதராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
உரத்த சிந்தனையின் நிறுவனத் தலைவர் எஸ்.வி.ராஜசேகர் வரவேற்புரை வழங்கினார்.
கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் இறை வணக்கம் பாடினார்.
கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் எழுதிய சின்னச் சின்ன நீதிக்கதைகள் நூலினை பசுமைத் தாயகம் நிறுவனர் திருமதி செளமியா அன்புமணி வெளியிட முதல் பிரதியினை தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் பெற்றுக் கொண்டார் . தொடர்ந்து அரிமா மணிலால் , எழுத்தாளர் பத்மினி பட்டாபிராமன் ஆகியோர் நூல்கள் பெற்றுக் கொண்டனர்.
உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் பார்வதி பாலசுப்பிரமணியத்திற்கு விழிப்புணர்வு வித்தகி விருது வழங்கப்பட்டது.
தலைக்கவச பாதுகாப்பு , குடிநீர் மேலாண்மை , மரம் வளர்ப்பு குறித்து ஸ்ருதிலய வித்யாலயா மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
மாணவ மாணவியர்களுக்கு பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம் பரிசுகளை வழங்கினார் .
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் , மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிறுவனர் சேயோன் , பேராசிரியை இன்சுவை , பாடகர் டி.கே.எஸ் கலைவாணன் , உரத்த சிந்தனை உதயம் ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் , எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர் , என்.சி மோகன்தாஸ் , இதய மருத்துவர் சொக்கலிங்கம் மற்றும் உரத்த சிந்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ருதி லய வித்யாலாவின் தாளாளர் என்.ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
படங்கள்
மணிவாசகர் பதிப்பகம் குருமூர்த்தி
செய்திக்குறிப்பு
ஆபிஸ் பையன்
காணொலித் தொகுப்பு
மு மனோன்மணி.
கருத்துரையிடுக