சாலா விமர்சனம்
அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'சாலா'
மதுவுக்கு எதிரான இந்த படத்தில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், 'மெட்ராஸ்' வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி.விஷ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார். விட்னஸ், வடக்குப்பட்டி ராமசாமி படங்களுக்கு பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
வடசென்னையில் உள்ள பார்வதி பார் என்ற மதுபானக் கூடத்துக்காக இரண்டு குழுக்கள் மோதிக் கொள்கிறார்கள். அருள்தாஸ் மற்றும் அவருக்கு தம்பி போல இருக்கும் நாயகன் தீரான் ஆகிய இருவருக்கும் எத்தனையோ பார் நடத்தினாலும் அந்த பார்வதி பாரை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பது கனவு.
அவருக்கு எதிராக அந்த பாரை கைப்பற்றி அது கைக்கு வந்த மறுநொடியே பழைய பகையால் அவர்களை பழிவாங்க நினைக்கிறார் சார்லஸ் வினோத். இவர்களின் போட்டிக்கு மத்தியில் டாஸ்மாக்குகளை இழுத்து மூட பெரும் அறப்போராட்டத்தையே நடத்தி வருகிறார் நாயகி. டாஸ்மாக் கடையை மீண்டும் கைபற்றினார்களா? நாயகியின் போராட்டம் வெற்றி அடைந்ததா? என்பதே கதை.
நாயகனாக தீரன் கட்டுமஸ்தான உடலுடன் ஹீரோவுக்கு உண்டான அம்சங்களுடன் வலம் வருகிறார். நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ் எதார்த்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவும், தீசன் இசையும் படத்துக்கு கூடுதல் பலமாகவே இருக்கிறது. வில்லனாக வரும் சார்லஸ் வினோத்தின் உடல் பாவனை முக தோற்றம் எல்லாம் ஓகே.
குடியால் வரும் விளைவுகளை சரியாக சொல்லியிருகிறார் இயக்குனர் மணிபால். இப்படத்தில் தீரன் குரல் சிம்பு குரலை ஜெராக்ஸ் எடுத்தாற்போல கேட்கிறது. கிளைமேக்ஸ் கர்ப்பிணி பெண் காட்சி மனம் தாங்காமல் அனைவரையும் தலை சரிய வைத்தது. மது பிரியர்கள் கட்டாயம் இந்த படத்தை பாருங்கள்.
மொத்தத்தில் இந்த 'சாலா' சிறந்த விழிப்புணர்வு.
RATING: 3.9/5
கருத்துரையிடுக