வாழை திரைவிமர்சனம்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'வாழை'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
தூத்துக்குடியைச் சேர்ந்த புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்துவரும் சிறுவன் சிவணைந்தன் படிப்பில் கெட்டிக்காரன். என்ன சேட்டைகள் செய்தாலும், ஊரெல்லாம் திரிந்தாலும் வகுப்பில் அவன் தான் முதல் மாணவன். ஆனால், வறுமையான குடும்பம். இவனது நண்பன் சேகர். வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்க உடன் அழைத்துச் செல்லப்படுகிறான் சிவணைந்தன்.
வாழை தார்களை சுமந்ததும் வலியால் அவதிபடுகிறான். சிவணைந்தனின் ஏழ்மையும், வேறு வழியில்லாமல் வாழைத்தார் வேலை ஒரு புறம்... மறுபுறம் அவன் விரும்பும் பள்ளிக்கூடமும் அங்கு அவனைக் கவர்ந்த ஆசிரியை பூங்கொடியும்.
அவனின் நெருங்கிய நண்பன் சேகருடன் சேர்ந்து பூங்கொடியைப் பார்த்து ரசிப்பது, பாடல் பாடுவது என பள்ளிக்காலத்தில் நமக்கு அப்படியிருந்த ஆசிரியைகள் எல்லாரும் நினைவுக்கு வருகின்றனர். பிறகு வாழைத்தார் சுமக்க தன் வியாபாரியிடம் அதிக கூலி கேட்க அதனால் நடந்த விளைவு என்ன? சிவணைந்தன் கனவு என்ன ஆனது? என்பதே கதை.
சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி கிளைமேக்ஸ் காட்சியில் நம்மை அழ வைத்துவிட்டார். சிவணைந்தனாக நடித்த பொன்வேல் மற்றும் சேகராக நடித்த ராகுல் இருவரும் சரியான தேர்வு. நன்றாகவே நடித்திருக்கின்றனர். இருவரும் வாழைத்தோட்டத்திற்குள் ஓடும்போது நாமே ஓடுவது போல் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
இசை அருமை. கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது இந்த படம். கிளைமேக்ஸ் காட்சியை அழாமல் பார்க்க முடியாது.
பள்ளி சிறுவன் ஆசிரியை கைக்குட்டையை மோப்பம் பிடிக்கும் காட்சியை மட்டும் வேறுவிதமாக சொல்லியிருக்கலாம்.....
மொத்தத்தில் இந்த 'வாழை' சிறந்த உண்மை படைப்பு
RATING 4/5
கருத்துரையிடுக