Boat Movie Review: போட் திரைவிமர்சனம்
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சாம்ஸ், சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கவுரி கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'போட்'.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
1943ம் வருடம் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கும்போது மெட்ராஸ் மீது ஜப்பான் நாடு குண்டு போடப்போகிறது என்கிற செய்தி வெளியாகிறது. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் நாடுகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் எதிரி படைகள், சென்னையிலும் குண்டு வீச திட்டமிடுகிறது.
அதன்படி இந்த தகவல் மக்களிடையே பரவ, தப்பிப்பதற்காக பலர் சென்னையை விட்டு வெளியேறுகிறார்கள். மீனவர்கள் பலர் தங்களது படகுகள் மூலம் நடுக்கடலுக்கு சென்று தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்படி, காசிமேடு பகுதி மீனவரான யோகி பாபு தனது பாட்டியுடன் தனது துடுப்பு படகில் நடுக்கடலுக்கு செல்ல முயற்சிக்கிறார்.
அவருடன் வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்களும் படகில் பயணிக்கிறார்கள். நடுக்கடலுக்கு சென்றதும் படகு பழுதடைந்து விடுகிறது. அதனால், தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை கரைக்கு செலுத்த வேண்டும் என்றால், படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும், என்று படகின் உரிமையாளர் யோகி பாபு சொல்கிறார்.
நடுக்கடலில் இருக்கும் படகில் இருந்து எப்படி வெளியேற முடியும், என்று அனைவரும் யோசிக்க, கடலில் ஒரு பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிகழ்கிறது. பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை....
யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், அவரின் பாட்டி, சாம்ஸ், சின்னி ஜெயந்த், கவுரி கிஷான் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார். பின்னணி இசை சிறப்பு.
கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்....
மொத்தத்தில் இந்த 'போட்' டில் ஒரு முறை பயணம் செய்யலாம்....
RATING: 3/5
கருத்துரையிடுக