லயோலா கல்லூரி, சென்னை நூற்றாண்டு விழா!
சென்னை:
இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான லயோலா கல்லூரி (தன்னாட்சி) தனது நூற்றாண்டு கொண்டாட்டங்களின் துவக்கத்தை இன்று அறிவித்துள்ளது. நூறு ஆண்டுகாலமாக
மிகச் சிறந்த கல்வி, செறிவான ஆய்வுகள் மற்றும் சிறப்பான சமூக சேவைகளை
வழங்கி வந்துள்ளதை பெருமையுடன் நினைவுகூருகிறது. இந்நிகழ்வில்
தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து,
சிறப்புரையாற்றினார். அருட்தந்தை எல்.ஜெபமாலை இருதயராஜ், எஸ்.ஜே. முன்னிலையில் முதலமைச்சர் லயோலா
கல்லூரியின் நூற்றாண்டு விழாவை அதிகாரபூர்வமாக அறிவித்து வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.
தமிழ்நாட்டின் பிற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசின் மூத்த அதிகாரிகள், கல்லூரி அதிகாரிகள், இந்தியா முழுவதிலுமிருந்து வந்த இயேசு சபையினர், மத குருமார்கள் மற்றும் கன்னியர்கள், முன்னாள் மாணவர் அலுவலக பொறுப்பாளர்கள், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பங்குதாரர்கள் மற்றும் கல்லூரியின் நலம் விரும்பிகள் ஆகியோர் கல்லூரியின் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தினத்தைக் கொண்டாட ஒன்றுகூடினர். லயோலா கல்வி நிறுவனங்களின் அதிபர் அருட்தந்தை டாக்டர் ஜே. ஆண்டனி ராபின்சன் எஸ். ஜே. அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் விருந்தினர்களை லயோலா கல்வி நிறுவனங்களின் அதிபர் அருட்தந்தை டாக்டர் ஜே. ஆண்டனி ராபின்சன் எஸ். ஜே கௌரவித்தார். கல்லூரியின் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான பயணத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கவும், ஆண்டு முழுவதும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் லயோலா குடும்பத்தின் அனைத்து மதிப்புமிக்க உறுப்பினர்களுக்கும், சமூகத்தினருக்கும் லயோலா கல்லூரி அன்புடன் அழைப்பு விடுக்கிறது. நமது வளமான வரலாற்றுக்கு மரியாதை செலுத்துவதில் நாம் ஒன்றுபடுவோம், நிகழ்காலத்தை நினைவுகூருவோம், வளம் நிறைந்த எதிர்காலத்தை ஆவலுடன் எதிர்நோக்குவோம்.
நூற்றாண்டு விழா குறித்து அருட்தந்தை டாக்டர் ஜே. ஆண்டனி ராபின்சன் எஸ். ஜே, கருத்து தெரிவித்தார். அவர்
கூறுகையில், "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், லயோலா கல்லூரியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும்
நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உயர்கல்வி நிறுவனமாக இருப்பதின் பெருமைமிகுந்த இத்தருணத்தில், தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா கொண்டாடங்களை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்”.
மேலும் அவர் கூறுகையில், "இந்த வரலாற்று நிகழ்வு முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாகவும் செயல்படுகிறது. இது நாளைய இளம் மனங்கள்/தலைவர்களை வடிவமைப்பதில் கவனம் செலுத்துவதுடன், தரமான கல்வியை வழங்குவதற்கும், கல்வியின் உயர்வை நோக்கி செல்வதற்குமான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று நம்புகிறோம் ".
லயோலா கல்லூரியைப் பற்றி:
1925-ஆம் ஆண்டில் அருட்தந்தை பிரான்சிஸ் பெர்ட்ராம் எஸ். ஜே (1925-1935) அவர்களால் லயோலா கல்லூரி நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் 75 மாணவர்கள் மட்டுமே சேர்க்கையில் இருந்த நிலையில், தற்போது ஏறத்தாழ 10,000 மாணவர்களின் கல்வித் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள். லயோலா கல்லூரி. புனித இக்னேசியஸ்
அவர்களால் நிறுவப்பட்ட இயேசு சபையினரால் லயோலா கல்லூரி நிர்வகிக்கப்படுகிறது. 112 நாடுகளில் உள்ள இந்தச் சபை, மனித விழுமியங்களில் கவனம் செலுத்தி, கல்விக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பல ஆண்டுகளாக, கல்வியில் சிறந்து விளங்கியதற்காக நற்பெயரைப் பெற்றுள்ளது, எண்ணற்ற தலைவர்களையும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களையும் வளர்த்துள்ளது, மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
லயோலாவின் நெடும் பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த முக்கிய நபர்கள் பின்வருமாறு:
« அருட்தந்தை பிரான்சிஸ் பெர்ட்ராம் எஸ். ஜே (1925-1935) நிறுவனத்தின் மதிப்புமிக்க நிறுவனர்.
« அருட்தந்தை ஜெரோம் டிசோசா எஸ். ஜே (1942-50) இந்திய அரசியலமைப்பு சபையின் புகழ்பெற்ற உறுப்பினர்.
« அருட்தந்தை ஜே. குரியாகோஸ் எஸ். ஜே (1970-83) சென்னை பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த கொள்கையை உருவாக்கும் அமைப்பான சிண்டிகேட்டில் மூன்று முறை உறுப்பினர்.
« அருட்தந்தை டாக்டர் ஜே. ஆண்டனி ராபின்சன் தற்போது, லயோலா கல்லூரி (தன்னாட்சி) லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (LIBA) லயோலா-ICAM பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (LICET) மற்றும் லயோலா பயிற்சி கல்லூரி போன்ற பல்வேறு லயோலா நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார்.
« மதிப்புக்குரிய டாக்டர் போனிஃபேஸ் ஜெயராஜ், எஸ். ஜே செயலாளராக பணியாற்றுகிறார்,
« மதிப்புக்குரிய டாக்டர் ஏ. லூயிஸ் ஆரோக்கியராஜ், எஸ். ஜே., கல்லூரியின் முதல்வராக உள்ளார்.
« டாக்டர் ஜே.ஏ.சார்லஸ், துணை முதல்வராக உள்ளார்.
லயோலா கல்லூரியின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களில் சிலர் பின்வருமாறு:
« இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன்,
« டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷையா, டாக்டர் சி. ரங்கராஜன், நீதிபதிகள் சலமேஷ்வர் மற்றும் கே. எம். ஜோசப், மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி எம். எம். சுந்தரேஷ்.
« சிறந்த பத்திரிகையாளர்களான தி ஹிந்துவின் என். ராம், ஆசிய இதழியல் பள்ளியின் சசிகுமார் மேனன் மற்றும் மகசேசே விருது பெற்ற பி. சாய்நாத்.
« புகழ்பெற்ற அரசியல்வாதிகளையும் முன்னாள் மத்திய அமைச்சர்களையும் உருவாக்கியதில் லயோலா கல்லூரி பெருமை கொள்கிறது. ப. சிதம்பரம் மற்றும் திரு. தயாநிதி மாறன், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் லயோலாவின் மாணவர்களே.
« விஐடியின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், ஜிண்டால் குளோபல்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ்குமார் உட்பட பல கல்வியாளர்கள் லயோலா கல்லூரியில்
பட்டம் பெற்றுள்ளனர். .
« மேலும், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலர் இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறது. புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களை கெளரவிப்பதற்கும், நட்பின் பிணைப்பை நினைவுகூருவதற்கும் கல்லூரி ஆண்டுதோறும் லயோலா முன்னாள் மாணவர் தினத்தை கொண்டாடுகிறது.
லயோலா கல்லூரியின் சாதனைகள்:
«
1925-இல் நிறுவப்பட்டது (100 ஆண்டுகள்
வரலாற்றுச் சிறப்பு)
«
1978-இல் தன்னாட்சி கல்லூரி
«
NAAC நான்காவது சுழற்சியில்
A++ கிரேடு
«
என்ஐஆர்எஃப் (இந்திய தரவரிசை
2023) கல்லூரி பிரிவில் 7வது இடம்
நூற்றாண்டு விழாவில் இடம்பெறும் பல்வேறு விழாக்கள் மற்றும்
நிகழ்வுகள்:
«
நூற்றாண்டு விழாவில் புதிய நூற்றாண்டு
கட்டிடம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும்
«
இயேசு சபை மற்றும் உயர்கல்வி பற்றிய
சர்வதேச மாநாடு மற்றும் இரண்டு நாள் முன்னாள் மாணவர் மாநாடு ஏற்பாடு செய்யப்படும்
«
”லயோலா கல்லூரியின் வரலாறு” ஆகஸ்ட்
2024-இல் துபாயில் நடைபெறவுள்ள லயோலா முன்னாள் மாணவர் சங்கத்தில் வெளியிடப்படும்.
«
நூற்றாண்டு விழாவில் கலாச்சார
நிகழ்வுகள், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகள், தொண்டு நிகழ்ச்சிகள், இசை
நிகழ்ச்சிகள் மற்றும் பல ஆரவாரமான கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
கருத்துரையிடுக