ஆரகன் விமர்சனம்
ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் நடிப்பில் அருண் கே.ஆர் இயக்கி இருக்கும் படம் தான் ஆரகன் .
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
முனிவர் ஒருவர், ஒரு நபருக்கு ஒரு முக்கியமான மந்திர மருந்தைக் கொடுக்கிறார். அது என்றும் இளமையாக வைத்துக் கொள்ளும் மருந்து . ஆனால் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த மருந்தைப் புதுப்பித்து அருந்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை சொல்லுகிறார் முனிவர்.
கவிபிரியா மனோகரன் அனாதை இல்லத்தில் வளர்கிறார். மைக்கேல் தங்கதுரை மேல் காதல் வலையில் விழுகிறார் நாயகி. தொழில் செய்து முன்னேற நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவர்கள் லட்சியம். அவனால் பணம் புரட்ட முடியாமல் இருக்க ஒரு மலைக் காட்டுக்குள், செல்போன் சிக்னல் வசதி மற்றும் சக மனிதர்கள் இல்லாத அடர்ந்த பகுதியில் தனிமையாக உள்ள வீட்டில் வசிக்கும் பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறாள் நாயகி.
பிறகு இளம் வயதில் இருந்து வயது முதிர்வு ஏற்படுகிறது. ஏன் வயது முதிர்வு ஏற்பட்டது? அங்கு நடந்தது என்ன? என்பதே கதை....
நாயகி கவிபிரியா மனோகரன். தோற்றம், நடையுடை பாவனை எல்லாம் சிறப்பு. மாய தோற்றத்துடன் வயதான பெண்மணியாக ஸ்ரீ ரஞ்சனி, பாழடைந்த வீட்டில் சங்கலியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வயதான தோற்றத்தில் கலைராணி, மற்றும் ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
கதையில் லாஜிக் இல்லை, மூலிகை வேரின் பூஜை காட்சிகளை ஏற்க முடியவில்லை....
மொத்தத்தில் இந்த ஆரகன் இரக்கம் இல்லாதவன்...
RATING: 2.9/5
கருத்துரையிடுக