நீல நிறச் சூரியன்- விமர்சனம்
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனரான சம்யுக்தா விஜயன் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் தான் 'நீல நிறச் சூரியன்'. இதில் கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலசந்திரன், கே வி என் மணிமேகலை, மசந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கஜராஜ் – கீதா கைலாசம் தம்பதிகளின் மகனாக வருகிறார் அரவிந்த். பள்ளி ஆசிரியரான அரவிந்த், தான் ஒரு திருநங்கை என்பதை உணர்கிறார். பெண்களைப் போல தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். ஆனால் பெற்றோர், ஊர் மக்கள் என்ன சொல்வார்களோ என தயங்குகிறார்.
ஒரு கட்டத்தில் அந்தத் தயக்கத்தை உடைத்து, தனது பெண்மையை வெளிப்படுத்தும் விதமாக பெண்ணாகவே தோற்றம் காட்டுகிறார். அதாவது ஆண்களுக்கான உடையைத் தவிர்த்து, சேலை கட்டி பள்ளிக்கு வருகிறார். அதன் பிறகு பள்ளி மாணவர்கள், சக ஆசிரியர்கள், என அனைவரும் எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள். பிறகு அவர் எப்படி சமாளித்தார்? என்பதே கதை...
ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களைப் பார்க்கிறது என்பதை கதையின் வாயிலாக உணர்த்துகிறார் இயக்குனர். IFFI-23 உள்ளிட்ட உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளையும் இப்படம் பெற்றுள்ளது. அனைவரும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
கதையை மேலும் திருத்தமாக எடுத்து சென்றிருந்தால் இன்னும் கவனம் பெற்றிருக்கும்.
மொத்தத்தில் இந்த 'நீல நிறச் சூரியன்' உணர்வின் வலி....
RATING: 3.2/5
கருத்துரையிடுக