ஆர்யமாலா விமர்சனம்
ஜனா ஜாய் மூவீஸ் சார்பாக வடலூர் சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில், ஆர்.எஸ்.கார்த்திக், மனிஷா ஜித், ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'ஆர்யமாலா'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் மனிஷா ஜித். இவர் நீண்ட ஆண்டுகளாக வயது பூப்படையாமல் இருக்கிறார்.
இவரின் தங்கை பூப்படைந்தவுடன் ஊர் மக்கள் பல விதமாக பேசி வருகிறது. பிறகு மனிஷா ஜித் கனவில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார். கனவில் கண்டதும் காதல் கொள்ளும் நாயகி கனவு கலைந்த பிறகும் நாயகனை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
தெருக்கூத்து கலைஞரான ஆர்.எஸ்.கார்த்திக், கோவில் திருவிழாவில் தெருக்கூத்து போடுவதற்காக நாயகியின் கிராமத்திற்கு வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் பார்த்ததும் தன்னை அறியாமலயே தன் காதலை கண்கள் மூலமாக மனிஷாஜித் வெளிப்படுத்த, அவரது கண்கள் மூலம் அவரது மனஓட்டத்தை அறிந்துக் கொள்ளும் ஆர்.எஸ்.கார்த்திக்கும் அவரை காதலிக்க தொடங்குகிறார்.
இருவரும் கண்கள் மூலமாகவே தங்களது காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். ஆர்.எஸ்.கார்த்தி, தெருக்கூத்தின் இறுதி நாளில் நாயகியை சந்தித்து தனது காதல் பற்றி பேச முயற்சிக்கும் போது, நாயகி மனிஷாஜித்தின் மாமா நாயகியை கொலை செய்ய முயற்சிக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை....
நாயகனாக நடித்திருக்கும் ஆர் எஸ் கார்த்திக் காத்தவராயன் வேடம் கட்டி கூத்து கலைஞராக மாறி நடிக்கிறார். நாயகி கண்களாலே கவர்கிறார். படத்திற்கு செல்வ நம்பியின் பாடலும், பின்னணியிசையும் பக்க பலமாக இருக்கிறது. ஜெய்சங்கர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் ரசிகர்களை இருக்கையில் அமர செய்கிறது. கிராமத்து அழகு அழகு தான் என ரசிக்க வைக்கிறது.
கதையின் நீளத்தை சுருக்கி இன்னும் அழுத்தமாக சொல்லிருக்கலாம்.....
மொத்தத்தில் இந்த 'ஆர்யமாலா' காதல் துளிகள்.....
RATING: 3.5/5
கருத்துரையிடுக