வேட்டையன் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?!
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங் என பலர் நடித்துள்ள படம் தான் ‘வேட்டையன்’
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்மை தவறாத காவல் அதிகாரியாக இருக்கிறார் அதியன். நீதிபதியாக சத்யதேவ் என் கவுன்டருக்கு எதிரானவர். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினிகாந்த், கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்து பெயர் பெறுகிறார்.
இவரது நேர்மையை அறியும் அரசு பள்ளி ஆசிரியை சரண்யா தான் பணி புரியும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது குறித்து அவருக்கு தெரியப்படுத்துகிறார். சென்னைக்கு பணி மாறுதல் வாங்கி வரும் சரண்யா, தான் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். பிறகு நம்ம வேட்டையன் இறங்கி என்ன செய்தார்? என்பதே கதை…
அவசரமான நீதி தேவையில்லை, விரிவான நீதிதான் தேவை என்பதை உணர்த்தும் முழுக்க முழுக்க 'பொருளடக்கம்' சார்ந்த ஒரு படம். அதைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ரஜினிகாந்த் என்கவுன்டைரை எப்போதும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு கதாபாத்திரம்.
தன்னால் ஒரு அப்பாவி உயிர் பறி போய்விட்டதே என்ற கவலையுடன் அதைச் சரி செய்ய நினைக்கிறார். அதற்குரிய தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் காட்சியெல்லாம் சிறப்பு. அனிரூத் இசையில் பட்டய கிளப்பிவிட்டார். பகத் பாசில் சிறந்த நடிகர் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்.
'மனசிலாயோ' பாடல் திரையரங்கை அதிரவிட்டது என்றே சொல்லலாம். நீதிபதியாக வரும் அமிதாப்பச்சன் தமிழை உச்சரிக்க கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார் என்பது 'லிப் சின்க்'ல் தெரிகிறது. அனைவரது நடிப்பும் ஓகே தான். குடும்பத்தோடு சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக இந்த படத்தை பார்க்கலாம்.
படத்தின் வேகத்தை அப்படியே கொண்டு சென்றிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்......
மொத்தத்தில் இந்த வேட்டையன் அதிரடி.....
RATING: 3.9/5
#VettaiyanReview
#VettaiyanMovie
கருத்துரையிடுக