சொர்க்கவாசல் விமர்சனம்
ட்ரீம்வாரியர் தயாரிப்பில், சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், நடிகர் RJ பாலாஜி, நட்ராஜ், கருணாஸ், செல்வராகவன், சானியா அய்யப்பன் அந்தோணி தாசன், ஹக்கீஷா, ஷர்புதின், பாலாஜி சக்தி வேல் என பலர் நடித்து வெளியாகியுள்ள படம் தான் 'சொர்க்கவாசல்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
தள்ளு வண்டியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார் RJ பாலாஜி. அப்பகுதியில் நடக்கும் ஒரு கொலையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். சில மாதங்கள் கழித்து பெயில் கிடைக்கும் சூழ்நிலை உருவாகிறது.
பெயில் கிடைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிறை அதிகாரி ஒருவர், பாலாஜியை அழைத்து, பிரபல தாதா சிகா (செல்வ ராகவன்) உணவில் பேதி மருந்து கலக்க சொல்கிறார். இந்த மருந்தை உணவில் கலப்பதற்கு முன்பே தாதா எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இந்த விஷயம் சிறை கைதிகள் - காவலர்கள் மோதலாக வெடிக்கிறது.
இந்த மோதலால் பாலாஜிக்கு கிடைக்க வேண்டிய பெயில் கிடைக்காமல் போகிறது. கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் RJபாலாஜி தான் தாதா மறைவுக்கு காரணம் என்று எண்ணி பாலாஜியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை...
RJ பாலாஜி, கருணாஸ், செல்வராகவன், சானியா அய்யப்பன் அந்தோணி தாசன், ஹக்கீஷா, ஷர்புதின் என நடித்த அனைவருமே கதைக்கு பொருந்தி இருக்கிறார்கள். தன் காதலியையும், அம்மாவையும், பிரிந்து வர மாட்டேன் என்று RJ பாலாஜி அடம் பிடிக்கும் காட்சி பார்க்கும் போது போலீசார் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது.
சிறைக்கு பின்னால் இருக்கும் நிழல் உலகத்தை ஓரளவு இப்படம் பதிவு செய்துள்ளது. சிறைக்கு சென்று வந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுடன் இந்த படத்தை பார்ப்பது கடினம்.
மொத்தத்தில் இந்த 'சொர்க்கவாசல்' நிஜ துடிப்பு....
RATING: 3.5/5
கருத்துரையிடுக