'பயாஸ்கோப்' விமர்சனம்
சங்ககிரி ராஜ் குமார் இயக்கத்தில் நடிகர்கள் சங்ககிரி ராஜ் குமார், மாணிக்கம், வெள்ளயம்மாள், முத்தாயி, சேரன் மற்றும் சத்யராஜ் கவுரவ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் 'பயாஸ்கோப்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
சங்ககிரி ராஜ்குமார் படிப்பை முடித்து விட்டு ஜோதிடத்தை நம்பி நடந்த தற்கொலை மற்றும் சக்தி பெற குழந்தையை நரபலி கொடுத்தல் போன்ற மூட நம்பிக்கைகளை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். படத்தில் தனது சொந்த கிராமத்தினரையே நடிக்க வைக்கிறார். படத்தை எடுக்க பணம் தேவைப்பட அதற்காக ஆடு, மாடுகளை விற்று தனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வைத்து வெங்காயம் என்ற பெயரில் படத்தை ஆரம்பித்து பல இன்னல்களுக்கு சந்திக்கிறார்.
இதனிடையே போலி சாமியார் படத்தை பற்றி கேள்விப்பட்டு ராஜ்குமாருக்கு தொல்லை கொடுத்து கொலை முயற்சி செய்யவும் ஏற்பாடு செய்கிறார். இதை எப்படி சமாளித்தார்? என்பதே கதை
பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பாவாக எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக இந்திராணி, தம்பிகளாக எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக மோகனபிரியா, ஜோதிடராக தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நமச்சிவாயம், நண்பராக ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக ரஞ்சித், ஹீரோயினாக நிலா மற்றும் பலர் கிராமத்தின் இயல்பான குணாதிசயங்களுடன் கதைக்கேற்றவாறு கச்சிதமாக புதுமுகங்கள் என்று தெரியாத வண்ணம் யதார்த்தமான நடிப்பில் மனதில் பதிந்து விடுகிறார்கள்.
திரைப்படத் தயாரிப்பானது வெற்றி தோல்விகளின் மையக்கருவாக இருப்பதை யதார்த்தமாக காட்டி ராஜ்குமாரின் திரைப்படத் தயாரிப்பின் மீதான ஆர்வத்தையும் அவரது ஆர்வத்தின் பின்னணியில் உள்ள உணர்ச்சிகரமான காரணத்தையும் அழகாக சமநிலைப்பாட்டுடன் சித்தரிக்கிறது.
பாட்டிகளின் லூட்டிகள் ரசிக்க வைக்கும்.... ஆனால் மூட நம்பிக்கை கதையை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த 'பயாஸ்கோப்' போராட்ட களம்......
RATING: 3.1/5
கருத்துரையிடுக