K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்திற்கான கவுண்ட்டவுன் ஆரம்பம்!
சென்னை:
தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகள் குழுமமான காவேரி மருத்துவமனை, K10K ரன் என்ற பெயரில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வின் மூன்றாவது பதிப்பை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்த தயாராகி வருகிறது. இந்த பிரதான நிகழ்விற்கு முன்னதாக K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்விற்கான ரேஸ் உபகரணங்கள் தொகுப்பை காவேரி மருத்துவமனை இன்று அறிமுகம் செய்தது.
சென்னை, காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் இயக்குனரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். A.N. வைத்தீஸ்வரன், இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்கேற்பிற்கான ரேஸ் உபகரணங்கள் தொகுப்பை அறிமுகம் செய்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இது தொடர்பாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிகரமாக காவேரி மருத்துவமனைகள் குழுமத்தால் நடத்தப்பட்டு இப்போது மூன்றாவது பதிப்பாக நடைபெறவிருக்கும் இந்த வருடாந்திர நிகழ்வு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான அறைகூவலை விடுக்கிறது.
எண்ணற்ற உயிரிழப்புகளை ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் ஏற்படுத்தும் இந்த கடுமையான நோய் அரக்கனுக்கு எதிராக இப்போது நடைபெற்று வரும் யுத்தத்தில் உதவுவதற்கு சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுவதே இந்த K10K ஓட்ட நிகழ்வின் முதன்மை குறிக்கோளாகும்.
கருத்துரையிடுக