Fire Movie Review

 ‘பயர்’ விமர்சனம் 



தயாரிப்பாளர் மற்றும் நடிகர் JSK சதீஷ் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பயர்’. 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம் :

பிசியோதெரபிஸ்ட் காசியை காணவில்லை என அவரின் வயதான பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். காசி மாயமானது குறித்து விசாரணை நடத்துகிறார் இன்ஸ்பெக்டர் சரவணன். விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது. இந்நிலையில் காசியை கண்டுபிடிக்குமாறு அமைச்சர் அளவில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. 

பாவப்பட்ட பெண்களை நாசம் செய்யும் காசியை கண்டுபிடிப்பதில் அமைச்சர் ஏன் ஆர்வம் காட்டுகிறார்? காசிக்கு என்ன ஆனது? என்பதே கதை... நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவரின் கதை தான் ஃபயர் படத்தின் கதை. இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துள்ள ரச்சிதா இந்த படத்தில் அளவுகடந்த கவர்ச்சியில்நடித்துள்ளார் . 

இந்த படத்தில் இருந்து அண்மையில் ரிலீஸ் ஆன மெதுமெதுவாய் பாடலில், ஓவர் கவர்ச்சி காட்டிய நிலையில் இது விமர்சனங்களுக்கு ஆளானது. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது விசாரணையை தெளிவாக தொடங்கியிருக்கிறார். 

படத்தில் கவர்ச்சி அதிகம்.... கிளைமேக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் தேவை.... 

மொத்தத்தில் இந்த 'பயர்' வெப்பம் குறைவு

RATING 2.8/5


FIRE MOVIE

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.