அகத்தியா விமர்சனம்
இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர் ஜீவா, ராக்ஷி கண்ணா, ஆக்சன் கிங் அர்ஜுன் , நிகழல் ரவி , வி டிவி கணேஷ் , ரெடின் கிங்ஸ்லி, ரோகிணி , விவேக் பிரசன்னா, சிறப்பு தோற்றம் யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'அகத்தியா'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
சினிமா கலை இயக்குநரான அகத்தியா ஒரு படத்துக்காக, தனது சொந்தக் காசை போட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு பழங்கால பங்களாவைப் பேய் வீடாக மாற்றுகிறார். படம் திடீரென நின்று போக, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அகத்தியாவுக்கு அவரது தோழி வீணா ஒரு ஐடியா கொடுக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் ‘ஸ்கேரி ஹவுஸ்’ போன்று இங்கு நாம் ஏன் உருவாக்கக் கூடாது? அதன் மூலம் கட்டணம் வசூலித்துப் போட்ட காசை எடுக்கலாம் என்கிறார். அதன்படி செய்கிறார்கள். கூட்டம் குவிகிறது. ஆனால், அந்த வீட்டில் உண்மையிலேயே சில ரகசியங்களும் பேயும் இருப்பது தெரிய வருகிறது. இதை கண்டுபிடிக்க நம்ம ஹீரோ ஜீவா களம் இறங்குகிறார். பின்னணி என்ன என்பதே கதை.....
பேயை எதிர்கொள்ள களத்தில் இறங்கும் ஜீவா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ் காட்சிகளை பார்க்கும் போது, ஜீவாவை காட்டிலும் அவரது அனிமேஷன் உருவம் அதிகம் உழைத்திருக்கிறது.
பிரெஞ்சு நாட்டு வாழ் தமிழராக சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. பிரெஞ்சு அதிகாரி எட்வின் டூப்ளெக்ஸுக்கும் (எட்வர்ட் சோனன்பிளிக்) சித்த மருத்துவர் சித்தார்த்தனுக்கும் (அர்ஜுன் சர்ஜா) நடக்கும் மோதலும் நட்பும் இறுதியில் எதிர்பாராத அந்த திருப்பமும் கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கின்றன.
காமெடியில் சிரிக்க வைக்கும் ஷா ரா, ராதாரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், சென்டிமென்ட் காட்சியில் ரோகிணி, சார்லி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். வி.எப்.எக்ஸ் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. கலை இயக்குநர் சண்முகத்தின் கடின உழைப்பும் தெரிகிறது.
கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பது கொஞ்சம் சோர்வு.... கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்....
மொத்தத்தில் இந்த 'அகத்தியா' குழந்தைகளை கவரும்....
RATING: 3/5
கருத்துரையிடுக