‘தி டோர்’ விமர்சனம்
JUNE DREAMS STUDIOS சார்பில், நவீன் ராஜன் தயாரித்து, ஜெய் தேவ் எழுதி இயக்கியிருக்கும் படம் தான் ‘தி டோர்’. இதில் பாவனா, ரோஷினி, ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராம், பைரி வினோ, வினோலயா, கபில், ரமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், சிந்தூரி ,சங்கீதா, பாண்டி ரவி, கிரீஸ் , நந்தகுமார், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கட்டிடக்கலை நிபுணரான பாவனா, வடிவமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக பழமையான சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார். இதனால், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை பாவனா தொடங்கும் போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தன் தோழியுடன் தனியாக வீட்டில் வசிக்கிறார். அப்போது உடன் இருந்த தோழி இரவில் சுவற்றில் முட்டி கொள்கிறார்.
இதனால் நெற்றியில் இரத்தம் கசிந்து மயங்குகிறார். பிறகு இருவரையும் அமானுஷ்ய சக்தி பயமுடுத்துகிறது. பாவனா ஏன் இப்படி நடக்கிறது? என தன் நண்பர்களுடன் ஆய்வில் இறங்கும் போது அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே கதை....
படம் ஆரம்பித்தவுடன், ஆவி அமானுஷ்யம் என செல்கிறது. அதன் பிறகு மெதுவாக க்ரைம் த்ரில்லராக செல்கிறது. அதன் பிறகு, இரண்டும் கலந்து செல்ல திரைக்கதையில் சுவாரஷ்யம் கூடுகிறது. பாவனா படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றால் போல் நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் அதுல் விஜய் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார். இசை ஓகே. திகில், கிரைம் என ஜெய் தேவ் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றுள்ளார்.
பின்னணி இசை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கூடுதல் கவனம் தேவை.....
மொத்தத்தில் இந்த ‘தி டோர்’ திகில் அலறல்.....
RATING: 3.2/5
கருத்துரையிடுக