Varunan Movie Review

வருணன் விமர்சனம் 



சென்னை ராயபுரம் பகுதியில், ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் இணைந்து தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகின்றனர். ராதாரவியின் தொழிலில், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் வேலை செய்து வருகிறார். 

மறுபுறம், சரண்ராஜின் மனைவி மகேஸ்வரி மற்றும் அவரது சகோதரர் சங்கர் நாக்விஜயன், தண்ணீர் கேன் வியாபாரத்துடன் இணைந்து சுண்டகஞ்சி வியாபாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க மதுவிலக்கு போலீஸ் அதிகாரியான ஜீவா ரவி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.  இந்நிலையில், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேபிரில்லாவை காதலிக்கிறார். ஆனால், தொடர்ந்து இரு குழுக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. இறுதியில் இந்த பகை என்ன ஆனது? என்பதே கதை... 

“நீரின்றி அமையாது உலகு” என்பது படத்தின் மையக்கருத்தாக உள்ளது. ஆனால், இயக்குநர் ஜெயவேல் முருகன் இதை கேங்ஸ்டர் படமாக உருவாக்கியுள்ளார். பஞ்சபூதங்களில் ஒன்றாகிய தண்ணீர், இயற்கையின் அருமையான கொடையாகும். ஆனால், அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பவர்களின் சூழ்ச்சிகளை இயக்குநர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 

கதைக் களத்துக்கும் ஒளிப்பதிவுக்கும் வலிமை சேர்க்கும்விதமாக போபோ சசியின் பாடல்களும் பின்னணி இசையும் நம்மைப் படத்துடன் ஒன்ற வைப்பதில் வெற்றிபெறுகிறது. ஆண்டவராக வரும் ராதாரவி வழக்கம் போல் வில்லத்தனமான மற்றும் குணச்சித்திரமான நடிப்பை மிக்ஸ் செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். திக்குவாயாக நடித்திருக்கும் சரண்ராஜ் செய்வதறியாது தவிக்கும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். 

இவருக்கு ஜோடியாக வரும் பிக் பாஸ் மகேஸ்வரியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகேஸ்வரி தம்பியாக நடித்திருக்கும் வில்லன் சங்கர்நாத் மகேஷ் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். அதேபோல் நாயகன் துஷ்யந்த் நண்பராக வரும் நடிகரும் சிறப்பாக நடித்து கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார். 

கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.... எடிட்டிங் பணியில் கூடுதல் கவனம் தேவை... 

மொத்தத்தில் இந்த 'வருணன்' தண்ணீர் வியாபாரி....

RATING: 2.9/5




கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.