'டெஸ்ட்' விமர்சனம்
சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் 'டெஸ்ட்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பது சித்தார்த் தின் கனவாக இருக்கிறது. அதேபோல் விஞ்ஞானியாக இருக்கும் மாதவன் நீரில் ஓடக்கூடிய கருவியை தயார் செய்து அதற்கான அங்கீகாரம் பெற தீவிர முயற்சி செய்து வருகிறார். மாதவனுக்கு மனைவியாக நயன்தாரா பள்ளியின் ஆசிரியையாக உள்ளார். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் நயன்தாரா எப்படியாவது தாயாக வேண்டும் என்பது அவரின் ஆசையாக உள்ளது. மாதவனிடம் பணம் இல்லாமல் கருவிக்கு அங்கீகாரம் கிடைக்காமல் கதறுகிறார். இந்த நிலையில் நயன்தாரா 'நீ எல்லாம் ஒரு ஆம்பளையா'? என கேட்க அந்த மனவிருக்தியில் ஒரு திட்டம் போடுகிறார் மாதவன். அந்த திட்டம் என்ன? அதில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை...
மாதவன் மிரட்டலாக நடித்துள்ளார். நயன்தாரா மேக் அப், சேலை என எப்போதும் போல் அவர் நடித்துள்ளார். சித்தார்த் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாதவன் முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாவது பாதியில் அவர் எடுக்கும் வில்லத்தனமும் வேற லெவலில் இருக்கிறது. டிராமாவாக கதை களம் உருவாகியிருக்கிறது.
கதை புதிதாக இல்லை... கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம்....
மொத்தத்தில் இந்த 'டெஸ்ட்' ஒரு முறை எழுதலாம்.
RATING 2.9/5
கருத்துரையிடுக