வல்லமை விமர்சனம்
கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம் ஜி, திவா தர்ஷினி, தீபா சங்கர், முத்துராமன், சி ஆர் ரஞ்சித், சூப்பர் குட் சுப்ரமணி, ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘வல்லமை’
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
மனைவியை இழந்த துக்கத்தில் தனது மகளை அழைத்துக் கொண்டு கிராமத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார் நாயகன் பிரேம்ஜி. மனைவி இழந்த துக்கத்தால் தனது செவித்திறனையும் இழக்கிறார் பிரேம்ஜி. செவியில் சிறப்பு கருவி பொருத்தி பிறர் பேசுவதை கேட்டுக்கொள்கிறார். சென்னை வந்து போஸ்டர் ஒட்டும் வேலையை செய்து தனது மகளை படிக்க வைக்கிறார். மகளே உலகம் என வாழ்ந்து வரும் பிரேம்ஜி மகளை பள்ளி முடிந்து அழைத்து வரும் போது அப்பா…. சிறுநீர் கழிக்கும் இடத்தில் ரத்தம் வருகிறது என்று மகள் கூறுகிறாள்.
உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று கேட்டால் அங்கு அதிர்ச்சியாக உங்கள் மகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார் என்று டாக்டர் கூறுகிறார். கோபம் அடைந்த நம்ம ஹீரோ இதற்கு யார் காரணம்? என அறிய தன் மகளுடன் களம் இறங்குகிறார். பிறகு யார் அந்த நபர்? அவரை என்ன செய்தார்கள்? என்பதே கதை…..
வலிமை இல்லாத ஒருவன் வலிமை உள்ளவனை வெற்றி கொள்வதே வல்லமை படத்தின் கரு. பிரேம்ஜியின் எதார்த்த நடிப்பு சிறப்பு. சிறுமியாக நடித்த திவா தர்ஷினி உண்மையான மகளாகவே மாறி நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். சரியான அப்பா மகள் தேர்வு. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே. சிறுகதைகள் தன்னம்பிக்கையை தூண்டுகிறது. பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயத்தை இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்ற இயக்குனர் கருப்பையா முருகனின் எண்ணத்திற்கு பாராட்ட வேண்டும்.
கதையை தெளிவாக இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.....
மொத்தத்தில் இந்த வல்லமை-யை குடும்பத்துடன் பார்க்கலாம்.
RATING: 3/5
கருத்துரையிடுக