AbilityFEST 2025 India International Disability Film Festival

எபிலிடிஃபெஸ்ட் 2025 – இந்தியா இண்டெர்நேஷனல் டிஸெபிலிடி ஃபிலிம் ஃபெஸ்டிவல்!



சென்னை: 

எபிலிடி ஃபவுண்டேஷன் 2 ஜூலை 2023, புதன்கிழமை இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் “எபிலிடிஃபெஸ்ட் 2025 – இந்தியா இண்டெர்நேஷனல் டிஸெபிலிடி ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடைபெறப் போவதை அறிவித்தது. ”60 செகண்ட்ஸ் டு ஃபேம் – ஆல் இந்தியா ஒன் மினிட் ஃபிலிம் காம்படீஷன் ஆன் டிஸெபிலிடி” யின் நடுவர் மன்ற அமர்வைத் தொடர்ந்து இவ்வறிவிப்பு வெளியானது.  

தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் எபிலிடிஃபெஸ்ட் 2025 நிகழ்வில்  திரையிடப்படும்.எபிலிடி ஃபவுண்டேஷன், பல்வேறு வகையினங்களின் கீழ் உள்ள ஊனமுற்றோர்களின் நலனுக்காக பணியாற்றிவருகிற, சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட, ஒரு தேசிய அமைப்பாகும். நடுவர்களான திரு ஏ.ஆர். ரஹ்மான், இசையமைப்பாளர், திருமதி சிம்ரன், நடிகை; திரு. மதன் கார்கி, பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்; திரு. முகம்மது ஷாம்ஸ் ஆலம் ஷேக், சர்வதேச பாரா நீச்சல் வீரர்; மற்றும் திரு. டின்கேஷ்,  வாழ்க்கைத் திறன்  பயிற்றுனர் மற்றும் உடல்நல ஆலோசகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பேசினர். 

60 செகண்ட்ஸ் டு ஃபேம் இன் நடைமுறைகளை மதிப்பிடும் ப்ராஸஸ் வேலிடேட்டரான மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோஸியேஷனின் செயல் இயக்குனர் க்ரூப் கேப்டன், திரு விஜயகுமார், அவர்களும் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டார். 

இவ்விழாவின் இயக்குனரான ஜெய்ஸ்ரீ ரவீந்திரனும், விழாத் தலைவரான ரேவதி ஆஷா கேளுன்னியும் எபிலிடிஃபெஸ்ட் - இந்தியா இண்டெர்நேஷனல் டிஸெபிலிடி ஃபிலிம் ஃபெஸ்டிவல்: 

சினிமா பை, வித் அண்ட் அபவுட் பீபிள் வித் டிஸெபிலிடீஸ் என்னும் இந்நிகழ்வை அறிமுகப்படுத்தினார்கள். 2005 இல் தொடங்கப்பட்ட எபிலிடிஃபெஸ்ட் நாட்டின் ஒரு முன்னோடியான நிகழ்வாகும். ஊனத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் தைரியமாக எடுத்துக் காட்டும் பலதரப்பட்ட திரைப்படங்களின் வரிசையுடன், தன் ஒன்பதாவது  பதிப்பில், இவ்வாண்டு, எபிலிடிஃபெஸ்ட் 2025 மீண்டும் சென்னையின் பிவிஆர்-ஐநாக்ஸ் ஸத்யம் சினிமாஸில் 7 ஜூலை முதல் 10 ஜூலை வரை நடைபெறுகிறது. தினசரி நான்கு காட்சிகளுடன் அனைத்து திரையிடல்களும் இலவசம், அனைவரும் பங்கேற்கலாம். 

கீழ்கண்ட லிங்கில் முன்பதிவு செய்வது அவசியம்: https://forms.gle/2fTfNm3LUrnSCAWa9 முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கை வசதி உள்ளது. 

எபிலிடி ஃபவுண்டேஷன் அதன் தொடக்கத்திலிருந்தே நேரடியான, சக்திவாய்ந்த நம்பிக்கையின் தரப்பில் நின்றிருக்கிறது: ஊனமுற்றவர்கள் அனைத்து இடங்களுக்கும் உரியவர்களே—விளிம்புநிலை மனிதர் அல்ல, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் முழுமையாகவும், சரிநிகர் சமானமாகவும் சேர்ந்து செயல்பட வேண்டியவர்கள். கல்வியோ, வேலை வாய்ப்போ, கலைத்துறையோ, அன்றாட வாழ்க்கையோ—சிறப்பு சலுகைகள் அளிப்பது அல்ல இதன் நோக்கம், மாறாக சம வாய்ப்பும், கண்ணியமான அணுகுவசதியுமே இலக்காக இருந்திருக்கின்றன. 

எபிலிடிஃபெஸ்ட் என்பது சினிமாவைக் கொண்டாடும் நிகழ்வு மட்டுமல்லாமல் அணுகுவசதிகளின் முக்கியத்துவத்தை அது முன்னிறுத்துகிறது-துணைவசன வரிகள்/எழுத்து வடிவத் தலைப்புகள், கேட்பொலி விளக்கங்கள் (Audio Description) மற்றும் அணுகுவசதி கொண்ட அரங்கங்கள். ஆதரவுக் குரல் கொடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கான வெளி இது. இந்நான்கு நாட்களில், உலகம்முழுவதிலிருந்தும் செரிவான, விருது பெற்ற குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் முழுநீளப் படங்களை கண்டு பார்வையாளர்கள் அவ்வற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். திரைப்பட இயக்குனரோ, திரைப்பட ஆர்வலரோ, மாணவரோ, குடும்ப உறுப்பினரோ அல்லது ஊனமுற்றவரோ, யாராக இருந்தாலும், ஒவ்வொருப் படமும் காலாவாதியான நம்பிக்கைகளுக்கு சவால் விடவும், புரிந்துணர்வை ஊக்குவிக்கவும், உரையாடல்களை தொடங்கவும் உதவும் வகையில் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது இவ்வாண்டில் சர்வதேச வரிசையில் தேர்ந்தெடுக்கபட்டுள்ள சில குறிப்பிடத்தக்க தலைப்புகள் இவை: Upside Down (இத்தாலி), Ab, Bad, Khak, Nan and Abrash (ஈரான்), Zomervacht (நெதர்லாந்து), Ania z Piekielnika (போலந்து), Dancer (மங்கோலியா), Working Differently (யு கே) மற்றும் Daruma, Thunder Rolls! The World of Blind Baseball   மற்றும் இதயத்தைக் கவரும் அனிமேஷன் படமான Luki and the Lights! (அமெரிக்கா). 

2025 ஆம் ஆண்டில் பெருவெற்றி பெற்ற தமிழ்ப் படமான “டூரிஸ்ட் ஃபேமிலி” ( Tourist Family)  பார்வையற்றோருக்கான கேட்பொலி விளக்கங்களுடன் (Audio Description) கூடிய முதல் பொதுவெளித் திரையிடல் இவ்வாண்டின் ஒரு சிறப்பம்சமாகும். டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினர் நம்முடன் இந்த அனுபவத்தை நேரடியாக பகிர்ந்து கொள்ளவருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். டவுன் சிண்ட்ரோம் உள்ளவரை முதன்மை நடிகராகக் கொண்ட முதல் இந்தி திரைப்படமான, மனதை நெகிழ்ச்சியடையச் செய்யும் அஹான் (2019) (Ahaan) திரையிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் இயக்குனரான நிக்கில் ஃபேர்வானியின் உரையை கேட்கும் வாய்ப்பும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும். சிதாரே ஜமீன் பர் (Sitaare Zameen Par) திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் அப்படத்தின் இயக்குனர் ஆர். எஸ். பிரசன்னா, எழுத்தாளர் திவி நிதி ஷர்மா ஆகியோருடனான கலந்துரையாடலுடன் இவ்வாண்டின் விழா நிறைவடையும்.   

இவ்வாண்டில் மிகவும் பேசப்பட்ட ஒரு திரைப்படத்தின் பின் உள்ள படைப்பு  செயல்முறையைப் பற்றி நேரடியாகத் தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பை அவர்களின் வருகை பார்வையாளர்களுக்கு வழங்கும். எபிலிடிஃபெஸ்ட் என்பது திரைப்படங்களைப் பற்றியது மட்டுமல்ல — இந்நிகழ்வு இணைவு, பார்வைப்படுத்துதல் மற்றும் கதை சொல்லலின் சக்தியைப் பற்றியது. இக்கதைகள் நம்மை உணர்ச்சிவசப்படுத்துவன, நமக்கு சவால் விடுவன. மேலும் ஊனமுற்றோர்களின் உலகம் தனியானது அல்ல — நம் அனைவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியே என்பதை நினைவூட்டுவன.



லேபிள்கள்:
This is the most recent post.
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.