'பீனிக்ஸ்' விமர்சனம்
அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி (அறிமுகம்), வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'பீனிக்ஸ்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
நாயகன் சூர்யா சேதுபதி தன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கிறார். அவரை கைது செய்யும் போலீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கிறது. சட்டமன்ற உறுப்பினரின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து சூர்யா சேதுபதியை கொலை செய்ய திட்டமிட, அவரது திட்டத்தை ஜெயிலில் தகர்த்தெரிகிறார் சூர்யா விஜய்சேதுபதி. மீண்டும் நாயகனை கொலை செய்ய ஒரு கும்பல் உள்ளே செல்கிறது. ஏன் செல்கிறது? பின்னணி என்ன? என்பதே கதை...
சூர்யா சேதுபதி, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அவரது வயதுக்கு ஏற்ற துடிப்பு மற்றும் துணிவுடன் நடித்திருப்பவர், அண்ணனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக காட்டும் அதிரடி மற்றும் அதைச்சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் மிரட்டுகிறார்.
ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை தேவதர்ஷிணி நடிப்பு கதைக்கு சரியான பொருத்தம் என்றே சொல்லலாம். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, வழக்கமான பழிவாங்கும் கதையை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் சொல்லியிருந்தாலும், காட்சிக்கு காட்சி ரசிக்கும் வகையில் படத்தை கையாண்டிருக்கிறார்.
படம் முழுவதும் சண்டையும், கொலையும் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை மிக சுருக்கமாகவும், வேகமாகவும் சொல்லி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார். ஆனால்
கோர்ட்டில் பெட்ரோல் பாட்டில் வீசும் காட்சியில் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த 'பீனிக்ஸ்' பயம் அறியான்.....
RATING 3.9/5
கருத்துரையிடுக